ஜெகதாபட்டினம், ஜன.2 அறந்தாங்கி மாவட்டம் ஜெகதா பட்டினத்தில் திராவிடர் கழக தோழர்கள் ஏற்பாட்டின் பேரில் தந்தை பெரியார் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது அனை வரையும் வரவேற்றார் மண மேல்குடி கலைக் கழகத்தின் பொறுப் பாளர் தோழியர் லாவண்யா.
இந்த நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் இராவணன், மாவட்ட தலைவர் மாரிமுத்து நீலகண்டன் பொதுக்குழு உறுப்பினர் ஆசிரியர் வேலு மண்டல இளைஞரணி செய லாளர் வீரையா அத்தாணி சிவசாமி ஆகியோர் முன்னிலை ஏற்க திமுக பொறுப்பாளர்கள் மணல்மேல்குடி ஒன்றிய துணைப்பெருந்தலைவர் சீனியார் என்ற எம்எம் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமநாதன், விடுதலை சிறுத்தைகள் சந்திர மோகன், சமாஜ்வாதி கட்சி மற்றும் பல்வேறு அரசியல் இயக்கங்களை சார்ந்த பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தந்தை பெரியார் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்
தார்கள். கழகத் தோழர்கள் சோமா நீலகண்டன் வசீகரன் ராஜா சந்தியா கார்த்திக் தேவி மற்றும் கழகத் தோழர்கள் பலரும் பெரியார் பிஞ்சுகள் அன்புச்செல்வன் பகுத்தறிவு ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனை வருக்கும் ஜெகதாப்பட்டினம் கழகத் தின் சார்பாக 'பெண் ஏன் அடிமை யானாள்?' புத்தகம் வழங் கப்பட்டது.
அதேபோல் பங்கேற்ற கழகப் பொறுப்பாளர்கள் மாற்றுக் கட்சி பொறுப்பாளர்களுக்கு மண்டல இளைஞரணி சார்பாக அனைவ ருக்கும் நூல்கள் வழங்கி சிறப்பிக்கப் பட்டது.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜெகதாப்பட்டினம் கிளை கழக தோழர்கள் குமார், கார்த்திக், மண மேல்குடி மகளிர் அணி பொறுப் பாளர் லாவண்யா சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.
No comments:
Post a Comment