பெங்களூரு, ஜன. 2 - கருநாடக மாநிலத்தில், ஆளும் பா.ஜ.க. அரசு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ள நிலையில், வி. எச்.பி., பஜ்ரங்தள் உள் ளிட்ட இந்துத்துவா அமைப்புகளும் தங்கள் பங்கிற்கு கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர். பதிலடி யாக தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் பவுத்த மதத்தை தழுவும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இதனிடையே, தும்கூரில், கிறிஸ்துமஸை ஒட்டி பிரார்த்தனை நடத்திய வர்களை வீடு புகுந்து மிரட்டிய பஜ்ரங் தளத் தைச் சேர்ந்த ஆண் களை, தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் ஒன்று சேர்ந்து விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது.
தும்கூரில் உள்ள ராமச் சந்திரா என்ற தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரின் வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடந்துள்ளது. அப்போது தான் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் வந்து, ஏன் உங்களது நெற்றியில் குங்குமம் வைக்கவில்லை என்று பெண்களிடம் கேட்டு தகராறு செய்துள் ளனர். இதனால், கொதித் தெழுந்த தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள், நாங்க குங்குமம் வைப்போம், வைக்காமல் இருப்போம்.. அதைக் கேட்க நீங்கள் யார்? தாலியைக் கூட கழற்றி வைப்போம்; அது பற்றியெல்லாம் உங்களி டம் சொல்ல வேண்டிய தில்லை... முதலில் உங்க ளுக்கு இதைக் கேட்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? என்று சர மாரியாக கேள்விகளை எழுப்பி பதிலடி கொடுத் துள்ளனர். இதனால் பஜ்ரங் தளத்தினர் பின்வாங்கி அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
No comments:
Post a Comment