- தாகிர் முஹமது -
முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று சென்னையில் தனது 125 ஆம் ஆண்டு விழாவை 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கொண்டாடியபோது, விழாவினைத் தொடங்கி வைத்த அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி பேசும்போது விரும்பத் தகாத சில செயல்கள் கடந்த காலத்தில் நடந்தேறியுள்ளன என்ற போதிலும், அத்தகைய செயல்கள் மீண்டும் நடைபெறுவது தவிர்க்கப்பட வேண்டும். இந்தியா எப்போதுமே வெளிப்படையான, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, மத சகிப்புத் தன்மை கொண்ட நாடாக விளங்கி வருகிறது. நமது குடிமக்களுக்கு மத சுதந்திரம் சட்ட நூல்களில் வழங் கப்பட்டு இருப்பது மட்டுல்லாமல், நமது பண்டைய நாகரிகத்தின் பாரம்பரியங்களாலும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.
ஒரு தலைவரும் அவரது உறுதிமொழியும்
அந்நாட்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும், இரு பெரிய சிறுபான்மை மத மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான சில வன்முறை நிகழ்ச்சிகள் பற்றிதான் பிரதமர் குறிப்பிட்டு இவ்வாறு பேசியுள்ளார். எடுத்துக் காட்டாக விளங்கத் தக்க அரசியல் பேரறிவும், மென்மையான குணமும் கொண்ட பிரதமர் எதிர்பாராமல் நிகழ்ந்த அத்தகைய வன்முறைச் செயல்கள் நீண்ட காலம் நிலைத்து நீடிக்காது என்றும், காலம் காலமாக இந்தியாவில் நிலவி வரும் பன்முகத் தன்மை மற்றும் சகிப்புத் தன்மை கொண்ட நாடு என்ற நிலைக்கு விரைவில் திரும்பிவிடும் என்றும் மிகுந்த நம்பிக்கையுடன் நாட்டிற்கு உறுதி அளித்தார். அதற்கடுத்த பொதுத் தேர்தலில் அவரது பா.ஜ.க. தோல்வி அடைந்த போதிலும், பத்தாண்டு கழிந்த பிறகு பெரு வெற்றி பெற்று 2014 ஆம் ஆண்டில் மீண்டும் அக் கட்சி ஆட்சிக்கு வந்தது. நாட்டின் எதிர்காலத்தைத் தீர் மானிக்கும் பா.ஜ.கட்சியின் இன்றைய தலைவர்களில் எவர் ஒருவராவது, அந்த மாபெரும் தலைவர் மிகுந்த பெருந்தன்மையுடன் நாட்டிற்கு அளித்த புனிதமான உறுதிமொழியை நினைவு கொண்டு இருக்கிறார்களா? இந்த நாட்டின் பண்டைய கலாச்சார பாரம்பரியங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டின் வரலாற்றுக் குப்பைக் கூடையில் தூக்கி எறியப்படுவதைக் காண் பதற்கு அவர் நீண்ட காலம் உயிரோடு இருக்கவில்லை. அவரது அமைதியான, மென்மையான நம்பிக்கை நிலவுவதாக கள உண்மைத் தன்மை மாற்றப்பட வேண்டும் என்பதை அவரது சோகம் நிறைந்த மரணத்திலும் அப்போதைய ஆட்சியாளர்கள் மறந்து போனது இழப்புக் கேடேயாகும்.
பின்னோக்கிப் பார்த்தால், 1947 ஆம் ஆண்டில் வெளிநாட்டவர் ஆட்சி என்னும் அடிமைத் தளையில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா, மத ரீதியில் தனக்காகத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றே வாஜ்பேயி விரும்பினார் என்பது தெரிய வரும். இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு அடுத்த ஆண்டில், உலகில் அமைதி நிலவச் செய்வதற்காக உருவாக்கப் பட்ட அய்.நா. அவையின் அனைத்து உறுப்பினர் களும், அந்த அவையினால் வெளியிடப்பட்ட மேக்னகார்டா போன்ற மனித உரிமைகளுக்கான அனைத்துலக பிரகடனத்தில் பொறிக்கப்பட்டுள்ள அனைத்து லட்சியங்களும் வெற்றி பெற்று மேம்பாட டையவும் செய்ய உறுதி பூண்டிருப்பவர்கள் என்பது அந்த பிரகடனத்தின் முன்னுரையில் கூறப்பட்டு உள்ளது. அனைத்து மனித உயிர்களும் சுதந்திரமாக வும், சமத்துவத்துடனும், கவுரவத்துடனும் பிறந்த வர்கள் ஆவர். பகுத்தறிவுடன் கூடிய நியாய உணர் வையும், மனச் சாட்சியையும் கொண்ட மக்கள் ஒருவருடன் ஒருவர் சகோதர உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அந்த பிரகடனத்தில் கூறப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்த பிரகடனத்தின் பாதிப்புகளும் கோரிக்கைகளும், அனைத்து வடிவங் களிலான சகிப்புத் தன்மை இன்மை பற்றி மிகமிக நுணுக்கமான விவரங்களுடன், 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு அனைத்துலக மனித உரிமை மாநாடுகளிலும், அவற்றைத் தொடர்ந்த அனைத்து வடிவங்களிலுமான சகிப்புத் தன்மை, மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலான அனைத்து வகை களிலுமான வேறுபாடுகள் ஒழிப்பு பற்றிய பிரகடன மும் (1981), சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றிய பிரகடனமும் வெளியிடப்பட்டன. பேரறிவுக்கான மிகச் சிறந்த எடுத்துக் காட்டு
பாராட்டி கொண்டாடப்பட்ட அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் அய்க்கிய நாடுகள் அவை யால் வெளியிடப்பட்ட போது, புதியதாக சுதந்திரம் பெற்ற இந்தியா தனது எதிர்காலத்துக்கான அரச மைப்பு சட்டத்தை வரைந்து கொண்டு இருந்தது. பெருந்தன்மை கொண்ட, மிகமிக உயர்ந்த பேரறிவும், விழிப்புணர்வும் கொண்ட தலைவர்களால் உருவாக் கப்பட்ட நமது அரசமைப்பு சட்டத்தில் இந்த மனித உரிமைகள் அவற்றின் எழுத்து மற்றும் உணர்வுடன் உள்ளுறையாக சேர்க்கப்பட்டுள்ளது. அதன் முன்னு ரையில், தனது அனைத்து குடிமக்களுக்கும் அனைத்து வகையிலும் நீதி, சுதந்திரம், சமத்துவம் வழங்கவும், தனிப்பட்ட மனிதர்களின் கவுரவம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கும் தேவையான சகோதர உணர்வை மேம்படுத்தவும் இந்திய மக்களாகிய நாங்கள் உறுதி மேற்கொள்ளுகிறோம் என்று கூறப் பட்டுள்ளது. இத்தகைய உறுதிமொழியை அளிக்கும் முன்னுரையில் இருக்கும் விவரங்கள் குடி மக்களின் மனித உரிமைகள் பற்றி அரசமைப்பு சட்டத்தின் மூன்றாம் (III) பகுதியில் விரிவாக தொகுக்கப்பட்டு கோட்டையைப் போல பாதுகாக்கப்பட்டுள்ளது.
நமது அரசமைப்பு சட்டப்படி நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி ஆட்சியாளர்கள் மற்றும் ஆளப்படும் குடிமக்கள் இருவருக்கும் எச்சரிக்க வேண்டிய அவசரமான தேவை இருப்பது நமது அனுபவத்தின் காரணமாக வெகு விரைவில் உணரப்பட்டது. அதன் பிறகு குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் பல கூட்டாக அரசமைப்பு சட்டத்தின் IV-A பகுதியில் சேர்க்கப் பட்டுள்ளது. இத்தகைய புனிதமான கடமைகளில் மிகமிக முக்கியமானவை, அரசமைப்பு சட்டத்திற்கும் அதன் லட்சியங்களுக்கும் அமைப்புகளுக்கும் கீழ்ப் படிந்து நடப்பது, அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இடையே மத, மொழி, வட்டார, பிரிவு வேறுபாடுகள் இன்றி பொதுவான சகோதர உணர்வை வளர்ப்பது ஆகியவையாகும்.
அரசமைப்பு சட்டக் காலம் தொடங்கி பல ஆண்டுகள் கடந்துவிட்ட - இப்போது நாட்டில் நிலவும் கள நிலவரம் அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக இருப்பதை, ஆழ்ந்த தேசப் பற்றுக் கொண்ட பல குடிமக்கள் காண்கிறார்கள். சுதந்திரம் பெற்ற இரு ஆண்டுகளுக்குப் பின் நமக்கு நாமே உருவாக்கி அளித்துக் கொண்ட அற்புதம் நிறைந்த நமது அரசமைப்பு சட்ட பிரகடனத்திற்கு பதிலாக, அதற்கு முற்றிலும் எதிரான வழிகளில் புத்தம் புதியதொரு எழுதப்படாத சட்டம் மாற்றி அமைக்கப்படுமா என்று அவர்கள் வியப்படைந்து போயுள்ளனர். நாம் ஏற்றுக் கொண்ட பழைய லட்சியங்களையும், மத பன்முகத் தன்மையையும் குடிமக்களின் கவுரவத்தையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் அனைத் துலக மனித உரிமைக் கோட்பாடுகளையும் கடமை களையும் முற்றிலுமாக புறக்கணித்து அவற்றை நாம் உதறித் தள்ளிவிடப்போகிறோமா?
செயல்படாத இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் மதம் அல்லது நம்பிக்கையை அவமதித்தல், மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பது, மத உணர்வுகளை காயப்படுத்துதல், மற்றும் அது போன்ற இதர செயல்கள் உள்ளிட்ட, கோபத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கும் மத உணர்வுக் குற்றங் களுக்கான தண்டனையை நிர்ணயம் செய்துள்ள மதம் தொடர்பான குற்றங்கள் என்ற ஒரு தனி அத்தியாயமே இருக்கும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் ஒன்றை, நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, உருவாக்கி தனது குடிமக்களுக்கு இந்தியா அளித்துள்ளது. அந்த சட்டங்களை பட்டப் பகல் வெளிச்சத்தில் மீறும் பல மக்கள் மீது அந்த சட்டவிதிகள் செயல்படுத்தப்படாமல் ஏன் இருக்கின்றன என்று ஒருவர் கேட்கக் கூடும். துறவிகள் போல வேடமிட்டுள்ள அவர்களில் சிலர் இன்று உலகின்அனைத்து நாடுகளிலும் 200 கோடி மக்கள் பின்பற்றும், உலகின் இரண்டாவது மிகப் பெரிய மதமான இஸ்லாம் மதத்தின் தோற்றுநரும், கடவுளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய அளவில் மதிக்கத் தக்கவரும் ஆன நபிகள் நாயகம் மீது புழுதி வாரித் தூற்றுகின்றனர் என்பதை தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி இதழ்களும் முறைப்படி செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இவை எல்லாம் மத உணர்வுகளை புண்படுத்தப்படுவதற்கான இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியவையல்லவா? தேசத்தின் இரண்டாவது மிகப் பெரிய குடிமக்கள் குழுவான இஸ்லாமியருக்கு எதிராக கொலை உள்ளிட்ட கொடுமைகள், வன்முறைத் தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு அளவுக்கு அதிகமாக தூண்டுதல் அளிக்கும்போது, மற்ற மக்களின் மீது அவர்களது உணர்வைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படுப வர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டப் படியோ அல்லது வேறு எந்த ஒரு சட்டத்தின்படியோ நடவடிக்கை எடுத்து தண்டிக்கவே முடியாதா? மத அடிப்படையில் பல்வேறுபட்ட மத சமூக மக்களி டையே, தேர்தல் தொடர்பாக பகை உணர்வையோ வெறுப்பு உணர்வையோ தூண்டிவிடுவது அல்லது தூண்டிவிட முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய தேர்தல் சட்டமான 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 125 ஆவது பிரிவு கூறுகிறது. அதனைக் குறிப்பிட்டு நமது நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த மிகுந்த திறமையும் புகழும் பெற்றிருந்த வி.ஆர். கிருஷ்ண அய்யர் ஒரு சமயத்தில், அரசியல் மதவெறி மிகப் பெரிய அளவில் நாட்டின் அரசியல் கட்சிகளால் வளர்க்கப்பட்டு தாண்டவமாடி வருவது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கக் கூடிய ஒரு செய்தியாகும். அவர்களது தொழில் எதுவாக இருந்தாலும் சரி, மத அடையாளத்தை அரசியலாக்குவதன் மூலம் பதவியைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் செயலை நிறுத்திக் கொள்ள அரசியல்வாதிகள் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டமும் அதில் மேலே குறிப்பிட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனை அளிக்கும் சட்டப் பிரிவுகளும் ஒட்டு மொத்தமாக செயல்படுத்தப்படாமல் இருப்பது மிகுந்த கவலையையும் வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது. இதைப் பற்றி நீதிபதி ஒருவர் புலம்பியிருப்பதில் இருந்து நாடெங்கிலும் நடக்கும் அரசியல் பிரச்சாரத்தின் ஒரு நிரந்தரமான அம்சமாகவே அது ஆகிவிட்டது என்பது தெரிய வருகிறது.
ஒற்றுமை என்னும் தங்கச் சங்கிலி
நாடு சுதந்திரம் பெற்றவுடன் நமக்குத் தயாரித்து அளிக்கப்பட்டுள்ள அரசமைப்பு சட்டப் பாதையின் படத்தின் பொருள் மற்றும் பாதிப்புகள் பற்றி தொடக்க காலம் முதற்கொண்டே உச்சநீதிமன்றம் தொடர்ந்து நமக்குக் கூறிக் கொண்டே வந்துள்ளது. அகமதாபாத் செயின்ட் சேவியர் கல்லூரிக்கும் குஜராத் மாநில அரசுக்கும் இடையே 1974 ஆம் ஆண்டில் நடை பெற்ற ஒரு வழக்கில், அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்டுள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்திய நாடு. இந்த பரந்த நாட்டில் வசிக்கும் மக்கள் பல்வேறுபட்ட மதங்களைப் பின் பற்றுபவர்களாகவும், பல்வேறு மொழிகளை பேசுப வர்களாகவும் உள்ளவர்கள் ஆவர். பல்வேறு மதங் களைக் கொண்ட, பல்வேறு மொழிகள் பேசப்படும், பல்வேறு கலாச்சாரங்கள் பின் பற்றப்படும் ஒரு வண்ணக் கலவை போன்ற நாடு இது. இந்திய அரசி யல் மீது அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அடை யாளத்தைப் பதித்துள்ளனர். இவை அனைத்தின் ஒரு கலவையாக இந்தியா இன்று விளங்குகிறது. இத்த கைய மதம், மொழி வேறுபாடுகளுக்கும் இடையே கண்களுக்குப் புலப்படாத ஒற்றுமை என்ற அடிப் படை உள்ளுணர்வின் தங்க இழைகள் ஓடிக் கொண் டிருப்பதை உணரலாம் என்று உச்சநீதிமன்றத்தின் மிகப் பெரிய அமர்வு தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகள் கழிந்த பிறகு எஸ்.ஆர்.பொம்மைக்கும் இந்திய ஒன்றிய அரசுக்கும் 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற வழக்கில், அதைவிடப் பெரிய உச்சநீதிமன்ற அமர்வு ஒரு மதச்சார்பான அரசு நிறுவப்படுவதை அரச மைப்பு சட்டப் பிரிவுகள் தடுக்கின்றன என்பதால், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் செயல்படுவதையும் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வதையும் அது தடுக்கிறது. மதச்சார் பின்மை என்பது மத சகிப்புத் தன்மையினை எதிர்க் காமல் அமைதியாக ஏற்றுக் கொள்ளும் தன்மையை விட மேலானது. அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவது என்ற ஆக்கப்பூர்வமான கோட்பாடு அது என்று அறிவித்துள்ளது.
மங்கி வரும் ஒளி
1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதியன்று காந்தியாரின் மரணம் என்னும் சோகம் நிறைந்த செய்தியை நாட்டிற்கு தெரிவித்தபோது, ஜவஹர்லால் நேரு, நமது வாழ்க் கையில் இருந்த வெளிச்சம் எல்லாம் போய்விட்டு இருள் சூழ்ந்துள்ளது. இந்த வெளிச்சம் இந்த நாட் டிலும், உலக நாடுகளிலும், உடனடியாக தற்காலத்தில் மட்டுமல்லாது எதிர்காலத்திலும் பிரதிபலிப் பதைக் குறிப்பதாகும். அது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும், எல்லையற்ற முடிவற்ற உண்மைகளின் பிரதிநிதியாகவும், சரியான பாதையை நமக்கு நினைவு படுத்திக் காட்டிக் கொண்டும், இந்த பண்டைய நாட்டை சுதந்திர நாடாக மாற்றிக் கொண்டும் இருப்பதுமாகும் என்று கூறினார்.
அந்த சோகமயமான நாளன்றும், அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும், நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு மிகமிக முக்கியமான பங்களித் தவரான அசாதாரணமான அந்தத் தலைவரது போதனைகளை நமக்கு நினைவு படுத்திக் கொண்டு அரசு அலுவலகங்களிலும், கல்வி நிலையங்களிலும் ஒலி பெருக்கிகள் உரத்த குரலில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அப்போதும், எதிர்காலத்தில் எப்போதும், இந்தியா எத்தகைய நாடாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினாரோ அத்தகைய தொரு நாடாக இந்தியா தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிப்பதற்கான விருப்பத்தையும் உறுதியையும் இனியும் நாம் கொண்டிருக்கிறோமா? காந்தியார் என்னும் ஒளிப் பிழம்பு உலகெங்கும் உள்ள நாடுகளில் பார்க்கப்படும் என்ற நமது முதல் பிரதமரின் ஆக்க பூர்வமான நம்பிக்கையை நாம் நினைவு கொண்டிருக் கிறோமா? மற்றொரு பிரதமராக இருந்த மிகப் பெரிய தலைவரான அமைதி நிறைந்த அடல் பிகாரி வாஜ்பேயி 2003 ஆம் ஆண்டில், இந்தியா எப்போதுமே வெளிப்படையானதாகவும், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சகிப்புத் தன்மை கொண்ட நாடாகவும் இருக்கும் என்று அளித்த புனிதமான உறுதிமொழி யைப் பற்றி நாம் அக்கறையும் கவலையும் கொண்டி ருக்கிறோமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் நம்மிடம் பதில் உள்ளதா?.
நன்றி: தி இந்து, 05-01-2022
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment