17.1.2022
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
உ.பி. தேர்தலில் சமாஜ்வாடி கூட்டணிக்கு, வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓர் ஆண்டுக்கும் மேலாக போராடி வெற்றி கொண்ட விவசாய அமைப்புகளில் ஒன்றான பாரதிய கிஷான் சங்கத்தின் தலைவர் நரேஷ் திகாயத் ஆதரவு.
இந்தியாவில் 2021இல் 84 சதவீத இந்தியர்களின் குடும்ப வருமானம் குறைந்துள்ளது. அதே சமயம், நூறு கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆக்ஸம் எனும் உலக பொருளாதார மய்யம் அறிக்கை வெளியீடு.
தி டெலிகிராப்:
இந்து ராஜ்யம் அமைக்கப் பாடுபடும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் தீவிர ஈடுபாடு கொண்ட பிரதமர் மோடி, மத வெறுப்பு பேச்சு குறித்து மவுனமாகத்தான் இருப்பார் என வரலாற்றாசிரியர் தனிகா சர்க்கார் கருத்து.
டைம்ஸ் ஆப் இந்தியா:
சட்டப் பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப் படுவது குறித்து பல்வேறு அமைப்புகள் ஒன்றிய அரசிடம் குற்றச்சாட்டு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment