நாகர்கோவில், ஜன. 21- கன்னி யாகுமரி மாவட்ட திரா விடர் கழக கலந்துரையா டல் கூட்டம் நாகர்கோ வில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
குமரி மாவட்ட தலை வர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரை யாற்றினார். திராவிடர் கழக மாவட்ட செயலா ளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட துணைத் தலை வர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவ தாணு ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற் றினர். இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னு ராசன், கு.சந்திரன் ஆகி யோர் உரையாற்றினர். மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், பகுத்தறிவா ளர் கழக மாவட்ட அமைப் பாளர் இரா.லிங்கேசன், இளைஞரணி செயலா ளர் அலெக்சாண்டர், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் குமாரதாஸ் தோழர்கள் ப.முத்துவைர வன், எஸ்.பி. ஆறுமுகம் குமரிச் செல்வன், செல் லையா, ம.செல்வராசு, நகர துணைத் தலைவர் எச். செய்க்முகமது, சியா மளா மற்றும் கழகத் தோழர்கள், பலரும் கலந்து கொண்டனர்.
தீர்மானம் எண் 1
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் உள்ள தந்தை பெரியாருடைய சிலையை அவமதித்தவர்களை இந்த கூட்டம் வன்மை யாக கண்டித்தும்,
தீர்மானம் எண் 2
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய அறிவுறுத்தலின் படி பெரியாரிய நூல்கள் தொடர் பான ஆய்வரங் கம் நடத்துவது, இயக்க ஏடுகளை குமரி மாவட் டத்தில் பரப்புவது எனவும்,
தீர்மானம் எண் 3
நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் தேவைக் காக முக்கடல் அணையினை தூர்வார நடவ டிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது,
தீர்மானம் எண் 4
குமரி மாவட்டத்தில் பழுதடைந்து காணப்படு கின்ற நாகர்கோவில் மாந கர சாலைகள் உட்பட அனைத்து சாலைகளை யும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வா கத்தையும், நாகர் கோவில் மாநகராட்சி ஆணைய ரையும் கேட்டுக்கொள் வது, போன்ற தீர்மானங் கள் இக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment