சென்னை, ஜன.2 சென்னை வானிலை ஆய்வு மய்ய செயல் பாட்டை மேம்படுத்த உரிய நட வடிக்கை கோரி ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பெருமழைக் கால சூழ்நிலையில் மாநில அரசு அதனை எதிர்கொள்வது குறித்த ஒரு முக்கியமான விஷயத்தினை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர் பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் அறிக்கையை சார்ந்திருக் கின்றது என்பதை நீங்கள் அறி வீர்கள். உரிய காலத்தில் இந்த மய்யத்திலிருந்து பெறப்படும் முன்னெச் சரிக்கைகள் மாவட்ட நிர்வாகத் தினை தயார் நிலையில் வைத்திருக்க வும் அதன் மூலம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் ஏதுவாக அமைகிறது.
ஆனால், பெருமழை குறித்த அறிவிப்புகள் உரியநேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மய்யத்தால் வழங்க இயலாதநிலை உள்ளதை காண் கிறோம். உதாரணமாக 30-.12-.2021 அன்று மதியம் 12 மணிக்கு ஆய் வறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மய்யம் இடியுடன் கூடிய மிதமான மழை காலையில் தமிழ் நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்யும் என தெரிவித்து அதே சமயம் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை சென்னையில் சில இடங்களில் பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.
இதன்பின்னர் மாலை 3.40 மணிக்கு இந்த மய்யம் அளித்த எச்சரிக்கை அறிக்கையில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் பெய்யும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், மிக கடுமையான மழை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மதியம் முதல் இரவு வரை பெய்தது. மாலை 4.15 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மய்யம் ஆரஞ்ச் அலர்ட் வெளியிட்டது. அதற்குள் மிக அதிக கனமழை சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து பல பகுதிகள் மூழ்கி அதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் சென் னையில் ஏற்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மய்யத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க போதுமான திறன் குறைபாடாக உள்ளதால் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத் தினால் தக்க நேரத்தில் உரிய முன் னேற்பாட்டுப் பணிகளை மேற் கொள்ள இயலாத நிலை அடிக்கடி ஏற்பட்டுவிடுகிறது.
இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் பெரும் பாதிப்பை ஏற் படுத்துவதோடு உயிர், உடைமை இழப்புகள் ஏற்படுவதற்கும் முக்கிய மான கட்டமைப்புகள் சேதமடைவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
இந்த நிகழ்வுகள் சென்னை இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பினை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் தொழில்நுட்பத்தை செம்மைப் படுத்து வதில் கூடுதல் முதலீடு செய்யவேண்டியதன் அவசியத்தை யும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, பெருமழை புயல் போன்ற ரெட் அலர்ட் சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகை யில் சென்னை வானிலை ஆய்வு மய்யம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment