மறைந்த இராயபுரம் கோபால் அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து நினை வேந்தல் நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.
அவர் தனது உரையில்,
ஒரு படை வீரனை இழந்த ராணுவத் தளபதி எப்படி துன்பத்தில் இருப்பானோ அந்த துன்பத்திலும் வேதனையிலும் நான் இங்கு வந்துள்ளேன். அவரை பார்க்கும் போதெல்லாம் உடல் நலத்தை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள். பொதுநலத்திற்கு, இனநலத்திற்கு, தனது வாழ்க்கையை அர்ப்பணித்த நமது கோபால் அவர்கள் தனது உடல்நலத்தை கவனிக்கத் தவறிவிட்டார். அவரை எந்தளவு சிகிச்சை தந்தேனும் காப்பாற்றிட வேண்டும் என்று பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும் இயற்கையின் கோணல் புத்தி அவரை நம்மிடம் இருந்து பறித்து விட்டது. அவர் இங்கே படமாக இருந்தாலும் நமக்கு ஒருவகையில் பாடமாகவும் இருக்கிறார். அவரது இயக்கத் தொண்டிற்கு சிறப்பு செய்யும் வகையில் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு வளாகத்திற்கு "இராயபுரம் கோபால்" நினைவு வளாகம் என்று பெயர் சூட்டப்படும் என்பதையும் அவருக்கு நமது வீர வணக்கத்தையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இரங்கல் நிகழ்வில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்,தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் நகர அ.தி.மு.க.செயலாளர் ஷாஜகான், மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் ஆகியோர் இரங்கலுரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மன்னார்குடி மாவட்ட செயலாளர் கணேசன், பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அ.அமர்சிங், மாவட்ட செயலாளர் அருணகிரி, திருவாரூர் மண்டல தலைவர் முருகையன், மண்டல செயலாளர் கிருட்டிணமூர்த்தி,தஞ்சை மண்டல செயலாளர் குருசாமி, மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், கழக கிராமப்பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், சொற்பொழிவாளர்கள் இராம.அன்பழகன், இரா.பெரியார் செல்வன், மாநில ப.க.ஊடகத்துறை அமைப்பாளர் மா.அழகிரிசாமி, மாநில ப.க. துணைத்தலைவர் கோபு.பழனிவேல், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, மன்னார்குடி மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், குடந்தை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி,தி.மு.க.ஒன்றிய செயலாளர் தன்ராஜ், உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். மறைந்த இராயபுரம் கோபால் அவர்களின் வாழ்விணையர் கோ.வளர்மதிஅவரது மகன் கோ.பிரபாகரன், மகள் கோமதி, சகோதரர்கள் வெங்கடாசலம்,கரிகாலன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மற்றும் தமிழர் தலைவரின் இணையர் திருமதி மோகனா வீரமணி, அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஆசிரியர் அவர்களின் மகள் அருள்பாலு ஆகியோர் ஆறுதல் கூறினர்.
முன்னதாக மறைந்த மாநில விவசாய தொழிலாளரணி அணி செயலாளர் மானமிகு இரா.கோபால் அவர்கள் நினைவு கல்வெட்டினை பெரியார் சிலை அருகில் மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அவர்கள் தலைமையில் பொதுச்செயலாளர் இரா.ஜெயகுமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் மாவட்ட செயலாளர் கோ.கணேசன் ஆகியோர் முன்னிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.
இறுதியாக மாவட்ட செயலாளர் கோ.கணேசன் நன்றி கூறினார்
No comments:
Post a Comment