நாட்டில் பட்டினிச் சாவுகளே இல்லையா? : உச்சநீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

நாட்டில் பட்டினிச் சாவுகளே இல்லையா? : உச்சநீதிமன்றம் கேள்வி

சென்னை, ஜன.19  நாட்டில் பட்டினிச் சாவுகளே இல்லையா எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசு சார்பில் அண்மையில் எடுக் கப்பட்ட பட்டினிச்சாவுகள் தொடர் பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

பட்டினிச்சாவு மற்றும் ஊட்டச் சத்து குறைபாடுகளை முற்றிலுமாக அகற்ற சமுதாய உணவகங்களை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் .எஸ்.போபண்ணா மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (18.1.2022) விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபா லிடம், நாட்டில் பட்டினிச்சாவுகளே ஏற்படவில்லையா எனக் கேள்வி எழுப்பி, ஒன்றிய அரசு சார்பில் அண் மையில் எடுக்கப்பட்ட  பட்டினிச் சாவுகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தர விட்டனர். மேலும் பசி மற்றும் ஊட்டச் சத்து குறைபாடுகளை போக்கும் வகை யில் சமுதாய உணவகங்களை அமைப்ப தற்கான மாதிரி திட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்கி அதனை மாநில அரசுகள் செயல்படுத்தும் வகையில் விட வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, பட்டினிச்சாவுகள், ஊட்டச் சத்து குறைபாடுகள் உள்ளிட்ட பிரச் சினைகள் குறித்து மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக் கல் செய்ய வேண்டும் என உத்தரவிட் டனர். அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்குரைஞர், எந்த மாநிலத்திலும் பட்டினிச்சாவுகள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறினார். அப்போது நீதிபதிகள், அப்படியென்றால் நாட்டில் பட்டினிச் சாவுகளே இல்லை என கூறுகிறீர்களா என கேள்வி எழுப்பி, தமிழ்நாட்டில் 5 வயது சிறுவன் பட்டினியால் உயிரி ழந்ததாக செய்திகள் வெளியானதை சுட்டிக்காட்டினர்.

இந்த விவகாரத்தை மனிதர்களின் பிரச்சினையாக உணர்ந்து, ஒன்றிய அரசு சமுதாய உணவகங்களை அமைப் பதற்கான மாதிரி திட்டத்தை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டு விசார ணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment