வியன்னா, ஜன.17 ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அய்ரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என கடந்த இரு மாதங் களுக்கு முன் உத்தேச திட்டத்தை அரசு அறிவித்தது. இந்நிலையில், திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு நாடாளு மன்றத்தின் ஒப்புதலை பெற அரசு தீமானித்துள்ளது.
மசோதா சட்ட வடிவம் பெற்ற பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனரா? என்பது குறித்து வழக்கமான பரிசோதனையின்போது காவல் துறையினர் சோதனை செய்வார்கள். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர் களுக்கு அதுகுறித்த நினைவூட்டுதல் அனுப்பப்படும்.
அதன்பிறகும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால், தடுப்பூசி செலுத்துவதற்கான நேரத்தை குறிப்பிட்டு சம்பந் தப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். அதுவும் பின் பற்றப்படாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மசோ தாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு
பெய்ஜிங், ஜன.17- குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹைடியன் மாவட்டத் தில் வசித்து வரும் ஒரு நபருக்கு பரிசோதனை செய்ததில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் முடிவு எதிர்மறையாக வந்துள் ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஒமைக்ரான் பாதிப்பு பெய்ஜிங்கில் கண்டறியப் பட்டதையடுத்து, சீனா கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. பெய்ஜிங் நகருக்குள் வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கரோனா பரி சோதனை சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment