சென்னை, ஜன.17 இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான டைம் (TIME) வரும் ஜனவரி 23ஆம் தேதி அன்று சட்டம், இளங்கலை வணிக நிர்வாகம், மனிதவள மேம்பாடு மற்றும் திட்ட மேலாண்மை ஆகிய பாடத்திட்டங் களுக்கான அகில இந்திய 'கேட் ஸ்காலர்ஷிப்' மாதிரி தேர்வுகளை இலவசமாக நடத்தவுள்ளது.
இந்த இலவச மாதிரி தேர்வுகளை மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே எழுதலாம்.
இந்த தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு 2022 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான டைம் கல்வி நிறுவனத்தின் சட்டம், இளங்கலை வணிக நிர்வாகம், மனிதவள மேம்பாடு மற்றும் திட்ட மேலாண்மை ஆகிய பாடத்திட்டங்களுக்கான நேரடி மற்றும் இணைய வழி வகுப்பு கட்டணத்தில் 100% கட்டண தள்ளுபடி உட்பட பல்வேறு சலுகைகள் உள்ளன.
மேலும் தேர்வுகளில் பங்குபெற்று 23 ஜனவரி 2022க்குள் மேற்கூறிய பாடத்திட்டங்களில் இணையும் அனைத்து மாணவர்களுக்கும் 10 சதவீத கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கேட் தேர்வுகளை எழுத ஆர்வமாக உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். <https://www.time4education.com/local/articlecms/page.php?id=4876>
No comments:
Post a Comment