தங்கள் நாட்டில் நடந்த சீக்கியர் மீதான இனவெறி தாக்குதலுக்கு அமெரிக்கா கவலை - கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 11, 2022

தங்கள் நாட்டில் நடந்த சீக்கியர் மீதான இனவெறி தாக்குதலுக்கு அமெரிக்கா கவலை - கண்டனம்

 வாசிங்டன், ஜன.11 நியூயார்க் விமான நிலையத்தில் சீக்கியர் மீதான இனவெறி தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித் துள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜே.கே.எப். பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளியே, தனது காருடன் நின்று கொண் டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஒருவரை, அடை யாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்கினார். 

மேலும், அந்த சீக்கியர் தலையில் அணிந்திருந்த டர்பன்’ எனும் தலைப்பாகையை தட்டிவிட்ட நபர் சில வெடி பொருட்களையும் அவர் மீது வீசினார். இது இனவெறி தாக்குதலாக சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பான, காட்சிப் பதிவை இந்திய வம்சாவளியை சேர்ந்த நவ்ஜோத் பால் கவுர் என்கிற பெண் அண்மையில் சுட்டுரையில் பகிர்ந்தார். பின்னர் இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலான தை தொடர்ந்து, சீக்கியர் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் வலுத்தன. 

இதனிடையே நியூயார்க் நகரில் உள்ள இந்திய துணை தூதரகம், சீக்கியர் மீதான தாக்குதல் ஆழ்ந்த கவலைக்குரியது என்றும், இது குறித்து விசாரிக்குமாறும் அமெரிக்க வெளியுறவுத்துறையை வலியுறுத் தியது. இதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:-

ஜே.கே.எப். விமான நிலையத்தில் சீக்கிய கார் ஓட்டுநர் மீது வெளிப் படையான தாக்குதல் நடத்தப் பட்டது தொடர்பான செய்திகளால் நாங்கள் மிகவும் கவலையடைந் துள்ளோம். எங்களின் பன்முகத் தன்மை அமெரிக்காவை வலிமை யாக்குகிறது, மேலும் வெறுப்பு அடிப்படையிலான வன்முறையை நாங்கள் வன்மையாக கண்டிக் கிறோம். வெறுக்கத்தக்க குற்றங் களைச் செய்பவர்களை அவர்களின் செயல்களுக்குப் பொறுப்பாக்க வேண்டிய பொறுப்பு நம் அனை வருக்கும் உள்ளது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment