புதுடில்லி, ஜன. 19- ‘டி.வி.எஸ்., மோட்டார்’ நிறுவனம், அதன் மின்சார வர்த்தக வாகன பிரிவை வலுப்படுத்தும் வகையில், உணவு வழங்கல் நிறுவனமான, ‘ஸ்விக்கி’ உடன் கைகோத்துள்ளது.
இது குறித்து, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: மின்சார வர்த்தக வாகன பிரிவை வலுப்படுத்துவதற்காக, உணவு வழங்கல் நிறுவனமான ஸ்விக்கி உடன் ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஸ்விக்கி நிறு வனம், உணவு வழங்கல் மற்றும் பிற தேவைக்கேற்ற சேவைகளுக்காக, டி.வி.எஸ்., மோட்டாரின் மின்சார வாகனத்தை பயன்படுத்தி சோதனையில் ஈடுபடும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து ஸ்விக்கி தரப்பில், “2025ஆம் ஆண்டிற்குள் மின்சார வாகனங்கள்
வாயிலாக, நாளொன்றுக்கு 8 லட்சம் கிலோ மீட்டர் என்ற அளவு வரை வழங்கல் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் நிறுவனம் உள்ளது.
“மேலும், பசுமை இயக்கத்தில் ஒரு நிலையான தீர்வை எட்டவும், எங்கள் உணவு வழங்கல் பங்காளர் களுக்கும் அதிக வருமானம் ஈட்டவும், இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment