திராவிடர் கழக வெளியீடுகளை, அமேசான் கிண்டில் தளத்தில் ஒருநாள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது!
இந்நிகழ்வு பெரியாரின் 48 ஆம் நினைவு நாளை யொட்டி, நம் வெளியீடுகளை ஒரே நாளில் 60 நாடு களுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டது என்றால் அது மிகையன்று!
அமேசான் நிறுவனம் ஒருநாளில் அதிகமாக விற்ப னையாகும் புத்தகங்களிலும் தரவிறக்கம் செய்யப்படும் புத்தகங்களிலும் முதல் 100 இடங்களைப் பிடித்த புத்தகங் களைப் பட்டியலிடுவர். அதில் வழக்கமாக 100 வெவ்வேறு புத்தகங்கள், 100 வெவ்வேறு பதிப்பகங்களின் பெயர்கள் இடம்பெறும்.
ஆனால் 24.12.2021 பெரியார் நினைவு நாளில் முதல் 48 இடங்களில் பகுத்தறிவு நூல்களே இடம்பெற்றன! அவை அனைத்துமே பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன- திராவிடர் கழக வெளியீடுகளே!
இந்நிகழ்வு அமேசான் கிண்டில் தளத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படுகிறது! அன்றைய தினம் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரியார் நூல்களைப் பார்வையிட்டும், தரவிறக்கம் செய்தும் மகிழ்ந்துள்ளனர்! பெரியார் கொள்கைகைக்கு மக்களிடம் இருக்கும் பெரும் செல்வாக்கை இது காட்டுகிறது!
அதேநேரம் புராண, இதிகாச மூட நம்பிக்கைகள் கொண்ட நூல்கள் அடிக்கடி இலவசத் தரவிறக்கம் செய்ய விளம்பரம் செய்யப்படுகின்றன. ஆனால் வரவேற்பு இருப்பதாய் அறிய முடியவில்லை!
காரணம் ஒரு புத்தகத்தைப் படித்தால் உணர்ச்சி வர வேண்டும்; பிறகு அறிவு வளர வேண்டும்! மட்டுமின்றி தம் சொந்த வாழ்வை முன்னேற்றக் கூடிய கருத்தாக்கம் அதில் இருக்க வேண்டும்!
இப்படி எதுவுமே இல்லாத ஒரு விசயத்தை எவ்வளவு நாள் தான் பொய் பிரச்சாரத்தால் காப்பாற்ற முடியும்?
60 நாடுகளில் இருந்து 26 ஆயிரம் மக்கள்!
இது ஒருபுறம் இருக்க பெரியார் நினைவு நாளில் மட்டும் திராவிடன் புத்தக நிலையம் (dravidianbookhouse.com) என்கிற இயக்க வலைத் தளத்திற்கு 26 ஆயிரம் பேர் வருகை தந்து பார்வையிட்டுள்ளனர்.
சில நாடுகளில் ஆயிரக்கணக்கிலும், சில நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கிலும் வந்துள்ளனர். பெயரே கேள்விப் படாத சில நாடுகளில் இருந்தும் பெரியார் நூல்களைப் பார் வையிட்டதும், நூல்களை வாங்கிச் சென்றதும் மகிழ்ச்சிக் குரியது.
இதோ...உலகெங்கும் திராவிடன் புத்தக நிலையத்திற்கு வந்து சென்ற நாடுகளைப் பார்ப்போம்!
அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, ஆஸ்தி ரேலியா, ஜெர்மனி, இலங்கை, மலேசியா, ஓமான், அயர்லாந்து, பிரான்ஸ், சுவீடன், நெதர்லாந்து, ஜப்பான், நியூசிலாந்து, தைவான், கத்தார், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், தென்கொரியா, நார்வே, சுவிட்சர்லாந்து, ஹாங்காங், தாய் லாந்து, போலந்து, இந்தோனேசியா, இத்தாலி, பங்களாதேஷ், பின்லாந்து, கானா, ஈராக், லக்சம்பர்க், மொரீசியஸ், மாலத்தீவு, பெல்ஜியம், சைப்ரஸ், எத்தியோப்பியா, ஜோர்டான், ஹங் கேரி, லைபீரியா, டொமினிக்கன் குடியரசு, பிலிப்பைன்ஸ், உக்ரைன் தென்னாப்பிரிக்கா, பிரேசில் காங்கோ, சைனா, டென்மார்க், கென்யா, கஜகஸ்தான், லாட்வியா, மடகாஸ்கர், மெக்சிகோ, பாகிஸ்தான், ருமேனியா, சியரா லியோன், டிரினிடாட் மற்றும் டொபாகோ
இவர்கள் மட்டும்தான் வந்தார்களா?
இல்லையில்லை... பெரியார் நினைவு நாளில் இயக் கத்தின் அதிகாரப்பூர்வ முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வந்து சென்றவர்கள் பல்லாயிரம் பேர்!
ஆக திராவிடர் கழகத்தின் இணையம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் பெரியார் நினைவு நாளையொட்டி, சற்றொப்ப ஒரு இலட்சம் பேர் வரை வந்து சென்றுள்ளனர்!
இந்த நடைமுறைகள் எப்போதும் இருந்து வந்தாலும், இதுவரை இவற்றைப் பெரிதாக வெளிப்படுத்தியது இல்லை! திராவிடர் கழகம் என்ன செய்தது எனக் கேட்கும் சிலர் இந்தச் செய்திகளையும் அறிந்து கொள்ளட்டும்.
இயக்கத்தின் முதன்மையான
முகநூல் பக்கங்கள் : Facebook.com/
தந்தை பெரியார் - /ThanthaiPeriyar.EVR
ஆசிரியர் கி.வீரமணி - /Asiriyarkv
திராவிடர் கழகம் - //Dravidarkazhagam
விடுதலை நாளிதழ் -/viduthalaidaily
உண்மை - /UnmaiMagazine
பெரியார் பிஞ்சு -/PeriyarPinju
பெரியார் வலைக்காட்சி - /Periyar tv
பெரியார் பண்பலை - / Periyar Fm
பெரியார் புத்தக நிலையம் -/ Draviadnbookhouse
திராவிட மாணவர் கழகம் - /dsf.tamilnadu
பிற:
பகுத்தறிவாளர் கழகம் - /rationalistforum
பெரியார் பன்னாட்டமைப்பு - /periyarinternational
உலக நாத்திகர் மாநாடு - /AtheistConference
டுவிட்டர் பக்கங்கள்: Twitter.com/
/asiriyarkv
/dravidarkazagam
/viduthalainews
/DSF_TN
/RationalistMagz
யூட்யூப்:Youtube.com/
/periyartv
/periyarfm
/viduthalaidaily
/themodernrationalist
/periyarpinju
இன்ஸ்டாகிராம்: instagram.com/
/viduthalai news
/periyar fm
/dsf_tn
linked.in: linked.com/
viduthalai-daily--விடுதலை-நாளிதழ்-2ab612120
/the-modern-rationalist-1abbb0226/
podcast: (anchor, spotify, google podcast, Gaana, apple podcast , & others)
periyar fm
periyar books (ஒலி புத்தகங்கள்)
வாழ்வியல் சிந்தனைகள்
வலைத் தளங்கள்:
periyar.org
kveeramani.com
viduthalai.in
viduthalai.page
unmaionline.com
modernrationalist.com
periyarpinju.com
periyar.tv
periyarfm.com
dravidarkazhagam.org
rationalistforum.org
periyarinternational.com
dravidianbookhouse.com
periyarmatrimonial.com
periyarworld.org
தொகுப்பு:
திராவிடர் கழகத் தொழில் நுட்பக் குழு
No comments:
Post a Comment