நடுவானில் கர்ப்பிணிக்கு விமானத்தில் பிரசவம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

நடுவானில் கர்ப்பிணிக்கு விமானத்தில் பிரசவம்

கனடா, ஜன. 18- கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணி யாற்றி வரும் மருத்துவர் ஆயிஷா காதிப்.

இவர் சம்பவத்தன்று கத்தார் நாட்டின் தோஹா வில் இருந்து உகாண்டா நாட்டின் என்டெப்பே செல்லும் கத்தார் ஏர் வேஸ் விமானத்தில் பயணம் செய்தார்.

சவுதி அரேபியாவில் இருந்து உகாண்டாவில் உள்ள சொந்த ஊருக்கு, இடம் பெயர்ந்த பெண் தொழிலாளியும் பயணம் செய்தார். அவர் கர்ப் பிணி ஆவார். இவருக்கு விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற் பட்டது. அப்போது விமா னத்தில் மருத்துவர்கள் யாரேனும் இருக்கிறார் களா என்று பணிப்பெண் ஒருவர் விசாரித்துள்ளார்.

உடனே மருத்துவர் ஆயிஷா எந்த தயக்கமும் இன்றி, தன் இருக்கையில் இருந்து எழுந்து விமா னத்தில் கூட்டமாக இருந்த இடத்துக்கு சென் றார். அவர் யாரேனும் மாரடைப்பு போன்ற ஆபத்தான நிலையில் தவித்துக் கொண்டிருக் கக்கூடும் என்று கருதி னார். ஆனால் அங்கே பிரசவ வலியில் கர்ப் பிணிப்பெண் துடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு மருத்துவர் ஆயிஷா பிரசவம் பார்த் தார். மருத்துவர் ஆயிஷா வுக்கு அந்த விமானத்தில் பயணித்த செவிலியர் ஒருவ ரும், குழந்தை நல மருத்து வர் ஒருவரும் உதவினர்.

அப்போது அந்த விமானம் நைல் நதிக்கு மேலே 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண் டிருந்தது. இந்த பிரசவத் தில் கர்ப்பிணிப்பெண் அழகான பெண் குழந் தையை பெற்றெடுத்தார்.

மருத்துவர் ஆயிஷா அந்த பெண்ணுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்த்து, பெண் குழந்தை பிறந்தபோது அனை வரும் கைதட்டி ஆரவா ரம் செய்துள்ளனர். அந்த குழந்தைக்கு மருத்துவர் ஆயிஷாவின் பெயரை ‘மிராக்கிள் ஆயிஷா’ என்று வைத்துள்ளனர். இதில் மகிழ்ந்து போன மருத்துவர் ஆயிஷா, ஆயிஷா என்று பதிக் கப்பெற்றிருந்த தனது தங்க கழுத்தணியை (நெக் லஸ்) புதிதாக பிறந்த அந்த பெண் குழந்தைக்கு பரிசாக அளித்தார்.

இந்த ருசிகர சம்பவம் டிசம்பர் 5ஆம் தேதி நடந் தது. ஆனால் மருத்துவர் ஆயிஷா தனது பணியில் மிகவும் தீவிரமாக இருந்து நேரம் கிடைக்கா மல் போனதால் இப்போது தான் நடந்ததை வெளி உலகுக்கு சொல்லி இருக் கிறார். இது உலக அள வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment