தந்தை பெரியார் படிப்பகம் மாவட்ட ஆட்சியருடன் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

தந்தை பெரியார் படிப்பகம் மாவட்ட ஆட்சியருடன் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

புதுக்கோட்டை காட்டுப்புதுக்குளத்திற்கு அருகில் தந்தை பெரியார் படிப்பகத்திற்கு வழங்கப்பட்ட 5செண்ட் இடத்தை மீண்டும் படிப்பகம் கட்டிக்கொள்ள வழங்க வேண்டி, இடம் கேட்டு கோரிக்கை விண்ணப்பம் 28.12.2021அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கவிதாராமுவிடம்  மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமையில் வழங்கப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர் முனைவர் மு.அறிவொளி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் .சரவணன், மாவட்டத் துணைத் தலைவர்  செ.இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு இயக்க நூல்கள் வழங்கப்பட்டது.

உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு பிள்ளை யார்பட்டி கவிஞர் எம்,குமார் மாநில அமைப்பாளர் இரா.குண சேரனிடம் ஓராண்டு சந்தா வழங்கி மகிழ்ந் தார். உடன் மாநில கலைத் துறைச் செயலாளர் .சித்தார்த்தன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் நாத்திக பொன்முடி.

No comments:

Post a Comment