டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடை பெற உள்ள நிலையில், பாஜகவில் இருந்து கேபினட் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் அவருடன் 5 எம்எல்ஏ.க்கள் அடுத்தடுத்து விலகினர். இவர்களில் சிலர் சமாஜ்வாடியில் சேர்ந்தனர். இவர்களை தொடர்ந்து, மேலும் பல எம்எல்ஏ.க்கள் விலக இருப்பதாக தெரிகிறது. இதனால், மீண்டும் ஆட்சியை பிடிக்கும் குறிக்கோளில் உள்ள பிரதமர் மோடி, அமித்ஷா, முதலமைச்சர் யோகி கலக்கம் அடைந்துள்ளனர்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
அமெரிக்காவில் 57 வயது நபருக்கு பன்றியின் இருதயம் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் உள்ளார்.
தி டெலிகிராப்:
உ.பி.யில் யோகி தலைமையிலான அரசு, பிற்படுத்தப் பட்டோர், பட்டியிலின மக்கள், பழங்குடியினர், சிறுபான் மையினர் என அனைவருக்கும் எதிராக செயல்படுகிறது என அக்கட்சியில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் விலகிய சுவாமி பிரசாத் மவுரியாவின் பேச்சு பாஜக வட்டாரங்களில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
நீட் தேர்வு விலக்கு குறித்து இதுவரை சந்திக்க மறுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, சனவரி 17ஆம் தேதி தமிழ் நாடு அனைத்துக் கட்சிக் குழுவை சந்திக்கிறார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment