ஏற்பாளர்களைவிட எதிர்ப்பாளர் களுக்கு நடுவில் நின்று தான் எதிர் நீச்சல் போட்டு முற்போக்காளர்கள் அன்றாடம் பயணிக்கும் நிலை இந்த நூற்றாண்டிலும் இருக்கிறது. மிகக் குறுபான்மையினராகவே இருந்தாலும் தூற்றல்களைப் பொருட்படுத்தாமல் தான் பகுத்தறிவாளர்கள் நாட்டு நலனில் சிறந்த பங்களிப்பை துணிச்ச லுடன் செய்து வருகிறார்கள்.
அண்மையிலே 'தன்மான தாகம் உள்ளவர்களுக்கு பெரியார் எனும் தண்ணீர்பந்தல் வைத்திருக்கிறார் ஆசிரியர், அவரவர்களுக்கு வேண்டிய அளவு தாராளமாக பருகலாம் வாருங்கள்' என்று பதிவு செய் திருந்தேன் முகநூலில். நிறைய பேர் வரவேற்று விருப்பம் அளித்திருந்தனர். "பெரியாரின் பல கருத்துகளை நான் ஏற்கிறேன் ஆனால் மக்களை நல்வழிப் படுத்த மதம் என்ற ஒன்று வேண்டுமே" என அந்தப் பதிவில் ஒருவர் கேட்டி ருந்தார். மதங்கள்தான் மக்களை பிளவு படுத்தி வெறுப்புணர்வை தூண்டுவ தையும் கூட அறியாத ஒட்டுமொத்த மக்களின் முகமாகவே நின்று அவர் வினவினார்.
இதோ 16.1.2022 அன்றைய 'இந்து தமிழ் திசை'யில் ஒரு செய்தி...
படிக்கும் போதே இதுதானா ஒழுக் கத்தை போதிக்கும் இலட்சணம் என கோபம் வெடிக்கும். அந்த செய்தியை அவரைப் போன்றவர்களிடம் நாம் எதிர்க் கேள்வியாக முன்வைக்க வேண்டியதாகிறது.
ரகசிய செயலியின் ரகசிய பணியாளர்கள்
முற்போக்கு கருத்துகளை வெளி யிடும் இந்தியாவின் முன்னணி பெண் பத்திரிகையாளர்களின் கருத்துகளை முடக்கும் வகையில் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த அய்ந்து மாதங்களில் கிட்டத்தட்ட 10 லட்சத்துக் கும் அதிகமான ஆபாச கருத்துகள் பதிவிடப்பட்டு உள்ளதாம். இப்படி முற்போக்கு கருத்துகளை பதிவிடுகிற, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கிற பெண் பத்திரிகையாளர்கள் குறித்த தகவல்கள் முதலில் திரட்டப்படுகின்றன. பின்பு டெக் ஃபாக் (TEK FOG) எனும் ரகசிய செயலியில் இருக்கும் ரகசிய பணியாளர்களுக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட பெண் எந்தக் கருத்தை பதிவிட்டாலும் அந்த செயலியின் ரகசியப் பணியாளர்கள் நாலாபக்கமும் இருந்தும் ஒரே நேரத்தில் அதிரடி தாக்குதலை நிகழ்த்துவார்கள். இந்த தாக்குதலால் சோர்ந்து போகிறவர்கள் தங்கள் சமூக ஊடகக் கணக்கிலிருந்து சிறிது காலம் விலகி இருக்க நினைப் பார்கள். உடனே அந்த கணக்கை ஹேக் செய்து அதன்மூலம் செயலியின் ரகசிய பணியாளர்கள் தங்கள் கருத்தை பதிவிடுவார்கள். மக்களுக்கு அது அந்த பத்திரிகையாளரின் கருத்து போல தோன்றும். ஆனால் அதை எழுதியவர்கள் அந்த ரகசிய செயலி யின் ரகசிய பணியாளர்கள் என்பது யாருக்கும் தெரியாது .
இந்த டெக் ஃபாக் எனும் ரகசிய செயலி பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பிரிவினர் பயன்படுத்தும் செயலி, இதன் மூலம் தற்போது நிகழ்த் தப்பட்டு வரும் இந்த இணைய வழி பாலியல் வன்முறை தாக்குதல் மோச மானது என 'தி வயர்'செய்தி இணைய தளம் ஆதாரங்களுடன் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளது.
முகக்கவசம் என்பது திராவிடம்.....
இதையெல்லாம் படிக்கும்போது நமக்கு நாடி நரம்புகள் சூடேறித்தான் விடுகிறது. "முகக் கவசம் என்பது திராவிடம் - அது பாதுகாப்பது; முகமூடி என்பது ஆரியம்" என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல் வது எவ்வளவு சரியானது!
பொய்யிலே பிறந்து பொய்யிலே ஆட்சியைப் பிடித்த பொய்யர்களுக்கு ஒரு பொய்யை பரப்பவும், இப்படி பெண்களை இழிவு படுத்தவும் ஒரே நேரத்தில் பல்லாயிரம் பதிவுகளை இணையத்தில் பதிவு செய்து பொது மக்கள் பதிவுபோல பரவலாக்கி காட் டவும், இந்த பிற்போக்கு வாதிகளுக்கும் அறிவியல் கண்டுபிடிப்பான தொழில் நுட்பம்தான் தேவைப்படுகிறது.
கீழ்த்தரமான உளவியல்
ஒரு பக்கம் 'பாரதத்தாய்' என்று சொல்லிக்கொண்டு இன்னொரு பக்கம் பெண்களின் மீது இவர்கள் தொடுக்கும் கீழ்த்தரமான உளவியல் வன்முறை எத்தகைய கேவலங்களை உள்ளடக் கியதாக இருக்கிறது.
எதிர்ப்புக் கருத்தே இருக்கக் கூடாது எனும் இவர்களின் தன்மை தான் காந்தியாரின் உயிரையும் பறித்தது. (மகாத்மா என்று அவர்களால் புகழப்பட்டவருக்கே இந்தக் கதி!) பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர் மற்றும் கவுரி லங்கேஷ் உட்பட பலர் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட தையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.
மானம் பாராத தொண்டு
அறிவுசார் சமத்துவக் கருத்துகளே அவர்களுக்கு ஆகாது என்பதால்தான் நம் பெண்களே விருப்பத்துடன் தாமே முன்வந்து அடிமைச்சின்னமாம் தாலி அகற்றிக் கொண்ட வேளையிலும் அவர்களை கொச்சைப்படுத்தி அவ தூறு சேற்றை வாரி இறைத்து அதில் ஒரு சுகத்தை கண்டார்கள். மானம் பாராத தொண்டு என்று தந்தை பெரியார் வழியில் - தமிழர் தலைவர் வழிகாட்டுதலில் பக்குவப்பட்ட நம் முடைய கழக மகளிரணி -மகளிர் பாசறை தோழர்கள் இந்த வசை மொழிகளை எல்லாம் பெருமளவில் தாங்கிக்கொண்டு உரமேறி வெளிவந்து பொதுத்தொண்டு ஆற்றுகிறார்கள்.
கலாச்சாரக் காவலர்களாக...
கரோனாவா கவலையில்லை... வெள்ளமா கவலையில்லை... ஊரை அடித்து சாமியார்கள் உலையில் போட்டாலும் கவலையில்லை...நாடு எக்கேடு கெட்டாலும் புராணங்களைப் பிடித்து தொங்கிக்கொண்டு பின்பக்கம் திரும்பி நடைபோடுவதும், அறிவி யலும் முற்போக்கும் என்று யாரேனும் பேசினால் எங்கள் மனம் புண்பட்டு விட்டது என்று கூப்பாடு போடுவது மான ஒரு கூட்டம், தங்களை கலாச் சாரக் காவலர்களாக வெட்கமில்லாமல் சொல்லித் திரிந்துக் கொண்டு திரை மறைவில் செய்யும் காரியம் இதுதான் என்பதை தி வயர் என்ற செய்தி இணையதளம் ஊருக்கு வெளிச்சம் போட்டு விட்டது.
உணர்ச்சியைத் தூண்டிவிட்டு....
ஒரே நாடு- ஒரே மொழி- ஒரே மதம் என்று நாட்டைத் துண்டாட நினைப்பதும், உணர்ச்சியைத் தூண்டி விட்டு மத உணர்வுகளில் கொந்தளிப்பு மனநிலையிலேயே மக்களை வைத் திருப்பதும் இவர்களின் வேலை என்று நாம் முன்னமே அறிந்திருந்தாலும் இத் தகையை செய்திகளை கேட்கும்போது முன்பைவிட நம் காலத்தில் எதிரிகள் நேர்மையற்றவர்கள் என்று சொல்லுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.
இப்படித்தான் நம்முடைய தலைவர் களின் பதிவுகளில் எல்லாம் கூட ஒரு கூட்டம் ஈ மொய்ப்பது போல இளித்துக் கொண்டு நிற்கும்.
இதுவும் ஒரு பிழைப்பா?
கருத்தை கருத்தால் வெல்ல முடியாத கயமைத்தனம் கொண்டவர் களை நாம் அலட்சியப் படுத்தினாலும் ஆபாச கருத்துகளையும் அசிங்கங் களையும் பெண்களின் மேல் ஏவி விடும் இந்த மனுவின் பிறப்புகளை பார்த்து "இதுவும் ஒரு பிழைப்பா?" என்றே கோபம் கொப்பளிக்க கேட்கும் உணர்வே நமக்கு மேலிடுகிறது.
பெண்கள் எல்லாம் பொங்கி எழுந்து இவர்களை ஓட ஓட துரத்தி அடிக்கும் அந்த நாளும் வரலாற்றில் வாராமல் எங்கு போகும்? ஆம் இவர்கள் விரைவில் விரட்டப்பட வேண்டியவர்கள் என்று இந்த தமிழ் மண் இந்தியாவிற்கே இந்த நற் காலத்தில் கற்றுக் கொடுத்துக் கொண்டி ருக்கிறது.
ஏனெனில் இது பெரியார் மண்!
- ம.கவிதா,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற
துணைத் தலைவர்
திருப்பத்தூர்.
No comments:
Post a Comment