காரைக்குடி புலவர் ஆ.பழநி அறக்கட்டளை ஏற்பாட்டில் ஆதரவற்ற முதியோருக்கு பொங்கல் புத்தாடைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

காரைக்குடி புலவர் ஆ.பழநி அறக்கட்டளை ஏற்பாட்டில் ஆதரவற்ற முதியோருக்கு பொங்கல் புத்தாடைகள்

காரைக்குடி, ஜன. 19- காரைக் குடியின் முதுபெரும் தமிழறிஞர், புலவர் .பழநி அவர்கள் சிறந்த தமிழ் இலக்கியப் படைப்பாற்றல் மிக்க சீரிய சிந்தனை யாளர். தமிழ்நாடு அர சின் பாவேந்தர் விருது மறைந்த முதலமைச்சர் கலைஞர், டாக்டர் நாவ லர் ஆகியோரின் பாராட் டைப் பெற்றவர்.

தனது வாழ்நாளில் 16 தமிழ் இலக்கிய நூல்களை எழுதியதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளின் பாராட்டும் பொற்கிழியும் பெற்றவருமாவார். இறுதி யாக "கம்பரின் மறுபக்கம்" எனும் நூலினை வெளி யிட்டு, காரைக்குடி விடு தலை வாசகர் வட்டம் பெருமைப்படுத்தியதும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தனிப் பாராட்டை, அண்மை யில் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலுள்ள "பெரியார் சிந்தனை உய ராய்வு மய்யம்" சார்பில் நடைபெற்ற விழாவில் அவருக்கு பாராட்டு, விருது,  பொற் கிழியையும் வழங்கி பெருமைப்படுத்தியது.

இவரது படைப்பான 1971இல் "அனிச்சஅடி" எனும் நாடக உரை நூல் மாநில அரசின் தேர்வில் முதல் பரிசும், இன்றும் மதுரை காமராசர் பல் கலைக்கழகத்தில் பாட நூலாகவும் திகழ்கிறது. அவரது மறைவுக்குப் பின் னும் முதியோருக்கு உதவு கின்றது.

தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு முதியோருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. மூத்த தமிழறிஞர் புலவர் .பழநி யால் நிறுவப்பட்ட "அனிச் சம் அறக்கட்டளை" யால், ஆண்டுதோறும் ஆதர வற்ற முதியோர்களுக்குப் புத்தாடைகள் வழங்கப் பட்டு வருகிறது.

இவ்வாண்டு காரைக் குடி நா.புதூரிலிருக்கும் சிறீ மீனாட்சி முதியோர் இல்லத்திலுள்ள ஆதர வற்று தங்கியுள்ள 25 பேருக்கு சேலை, ஜாக் கெட், வேட்டி, சட்டை, துண்டு மற்றும் இல்லத் திற்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற மளிகை சாமான் களும் அறக்கட்டளைத் தலைவர் சாமி.திராவிட மணிதலைமையில், உறுப்பினர் .சுந்தரம் முன்னிலையில் வழங் கினார்கள்.

அதுசமயம் அறக்கட் டளை உறுப்பினர்களான பெரி.சண்முகம், செயலா ளர் அழகுப்பாண்டியன், .காசிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இல்லக் காப்பாளர்கள் சீனிவாசன், தனலெட்சுமி ஆகியோர்நன்றி கூறினார்கள்.

No comments:

Post a Comment