நிகோசிய, ஜன.11 சைப்ரஸ் நாட்டில் புதிய வகை டெல்டாக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கரோனா வைரசின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா உள்ளிட்ட புதிய வகை பாதிப்புகள் அடுத்தடுத்து அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இந்நிலையில், ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலக நாடுகளில் பரவ தொடங்கியது. இவற்றில் இந்தியாவும் அடங்கும்.
இதனை தொடர்ந்து, டெல்டாக்ரான் என்ற புதிய வகை கரோனாவும் ஒரு சில நாடுகளில் தென்பட தொடங்கியுள்ளது. டெல்டா வகையின் மரபணு பின்னணியை ஒத்தும், ஒமைக்ரானின் சில திரிபுகளையும் அது கொண்டுள்ளது.
எனினும், இதுபற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர். அந்நாட்டில், கரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களிடம் இருந்து 11 மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதுதவிர்த்து, 14 மாதிரிகள் பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்பட்டு உள்ளன. மொத்தம் எடுக்கப்பட்ட 25 மாதிரிகளில் 10இல் ஒமைக்ரான் திரிபுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது என சைப்ரஸ் மெயில் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment