ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் எம்.பி. கடிதம்!
சென்னை, ஜன.19- இந்தியா முழுவதும் உள்ள சட்டப்பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச் சர், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச் சர், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், சட்டப் பல்லைக்கழக துணைவேந்தர்கள் உள் ளிட்டோருக்கு பி.வில்சன் அனுப்பி யுள்ள கடிதத்தில், அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களி லும் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றுவது அரசமைப்பு சட்டத் தின்படி கட்டாயம் என்பதை வலி யுறுத்தி ஏற்கெனவே கடிதம் எழுதி யதை நினைவு கூர்ந்துள்ளார்.
தற்போது, பல மாநிலங்களில் உள்ள சட்டப் பல்கலைக்கழகங்கள், தேசிய சட்டப் பள்ளிகளில் தாழ்த்தப் பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான அரசமைப்பு சட்ட இடஒதுக்கீடோ , மாநில இட ஒதுக்கீடோ பின்பற்றப் படவில்லை என்பது தெரிய வந்துள் ளதாக வில்சன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. முன்னெடுத்த சட்டப் போராட்டத்தின் விளைவாக, மருத் துவ பட்டப் படிப்புகளில் அகில இந் திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட் டோர் பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அறிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் அண்மையில் வரலாற் றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தேசிய சட்டப் பல் கலைக் கழகங்களிலும் இட ஒதுக்கீடு தொடர்பாக யாராவது ஒருவர் வழக்கு தொடர்ந்து, இட ஒதுக்கீடு பெறும் வரை காத்திருக்காமல், சட்டப்படிப்பில் தாழ்த்தப்பட்ட, பழங் குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு உரிய வாய்ப்பளிக்க அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால், சட்ட ரீதியான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment