முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜன.19 டில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
டில்லியில், ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தின் போது, நடைபெறும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில், தமிழ்நாடு அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு நடக்க இருக்கும் குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் இடம்பெறாது என்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (17.1.2022) கடிதம் எழுதி இருந்தார். அதில், உடனடியாக பிரதமர் தலையிட்டு தமிழ் நாட்டின் அலங்கார ஊர்திகள் டில்லியில் நடக்கும் அணி வகுப்பில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று (18.1.2022) பதில் அனுப்பி இருந்தார்.
பிரதமருக்கு கடிதம்
அதன் அடிப்படையில் முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை நேற்று (18.1.2022) வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், ஒன்றிய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பானது, இந்த ஆண்டு 'இந்தியா 75' என்ற தலைப் பின் கீழ் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் இடம்பெற வேண்டி, விடுதலைப்போரில் தமிழ்நாட்டின் பங் களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் ஒன்றிய அரசின் தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, 3 முறை அவர்கள் கூறிய திருத்தங்களைச் செய்தோம். 4-ஆவது கூட்டத்திற்கு எந்த வொரு காரணமும் இன்றி அழைக்காமல், அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரி விக்காமல் இருந்துவிட்டனர். தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்த எனது வருத்தத்தை நேற்று பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இன்று கிடைக் கப்பெற்ற ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சரின் கடிதத்தில், எந்தவித கார ணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட் டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பது அதிர்ச் சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
250 ஆண்டு கால பங்களிப்பு
இந்தியாவின் வேறு எந்த மாநிலத் திற்கும் சற்றும் சளைக்காத வகையில், விடுதலைப்போரில் தமிழ்நாடு செய்த 250 ஆண்டு காலத் தொடர் பங்களிப்பு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாகும். முதல் இந்திய சுதந் திரப் போர் என போற்றப்படும் சிப்பாய் புரட்சிக்கு (1857) அரை நூற்றாண்டுக்கு முன்பே நடந்தேறிய வேலூர் புரட்சி ஆங் கிலேய வல்லாதிக்க எதிர்ப்பு வரலாற்றில் முக்கிய தொடக்கமாகும். அதேபோல், ஜான்சிராணி வாள் வீசுவதற்கு நூற்றாண் டுக்கு முன்பே, ஆங்கிலேயர்களைத் தீவிர மாக எதிர்த்துப் போரிட்டு, தான் இழந்த நாட்டை வென்ற ஒரே ராணி என்ற புகழைப் பெற்றவர் வீரத்தாய் வேலு நாச்சியார்.
ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக பலமுறை போரிட்ட பூலித்தேவன், ஏகா திபத்திய அடக்குமுறைக்கு எதிரான போரில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பன மாக திகழ்ந்த வீரபாண்டிய கட்ட பொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை உள் ளிட்ட எண்ணிலடங்கா வீரத்திருமகன் களை விடுதலைத் தியாகத்திற்கு தந்த மண் தமிழ்நாடாகும்.
மாநில அரசின் விழாவில் பங்கேற்கும்
ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கு போட்டியாக, சுதேசி கப்பல் கம்பெனி எனும் பெரும் கனவை நெஞ்சில் ஏந்தி, தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்து, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகச் செயல்பட்டு இரட்டைத் தீவாந் திர தண்டனை பெற்றவர் வ.உ.சிதம்பர னார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தனது வீரமிக்க கவிதைகளால் விடுதலை வேள்வி செய்தவர் பாரதியார். இத்தகைய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாகத்தான் நமது அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டு இருந்தது.
ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர் கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி டில்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக் கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டுப் பற்றிலும், விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத் தும் விதமாக மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின கொண் டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும்.
மேலும், சமீபத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் போரில் தமிழ்நாடு என்ற ஒளிப்படக் கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற் பாடு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment