கழகத்தின் சார்பில் இந்தாண்டு வெளி வந்துள்ள நாட்காட்டி, நாட்குறிப்பு இரண்டும் வாங்கி மகிழ்ந்தேன்.
இரு விழிகள் போல இரண்டும் இருந்தது மிகச்சிறப்பு. நாட்காட்டியில் அய்யா, அம்மா, ஆசிரியர் ஆகியோரின் சிந்தனை கருத்துகள், அன்றைய நாளில் நிகழ்ந்தவை என்று நாட்காட்டி இருந்தது.
நாட்குறிப்பில் கழகத்தின்முக்கிய நிகழ்வுகள், குறிப்புகள் என அனைத்து பக்கங்களும் அருமை.
தந்தை பெரியார், நாகம்மையார், மணியம்மையார், ஆசிரியர் படங்கள் பாதுகாக்க வேண்டியது. இந்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளது . அடுத்த ஆண்டு வெளிவரும் போது தனித்தனி பக்கங்களில் வந்தால் பாதுகாக்க எளிமையாக இருக்கும்.
நாட்காட்டியின் ஒவ்வொரு காகிதமும் கிழித்து போட மனமில்லாமல் பாதுகாத்து வருகிறேன்.
தமிழர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கண்டிப்பாக பெரியார் நாட்காட்டி, பெரியார் உலகம் நாட்குறிப்பு இடம் பெறுவது தான் தமிழர்களுக்கு சிறப்பு.
புத்தாண்டு பிறப்பு
இல்லங்களில் இருப்பு
அய்யா நாட்காட்டி சிறப்பு
உள்ளங்கள் பூரிப்பு
கரிசல்பட்டி மு.சுந்தரராசன், மதுரை
No comments:
Post a Comment