வர்த்தகத் துளிகள் சந்தை மதிப்பில் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 11, 2022

வர்த்தகத் துளிகள் சந்தை மதிப்பில் சாதனை

மும்பை பங்குச் சந்தையின், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு, முதன் முறையாக, கடந்த வெள்ளியன்று, 50 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.தற்போதைய நிலவரப்படி, இந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பிரிவில், மொத்தம் 359 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கு மாம்பழ ஏற்றுமதி

மாம்பழம் மற்றும் மாதுளை ஆகியவற்றின், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, ஜனவரி - பிப்ரவரியில் துவங்கும் என, ஒன்றிய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதி ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சனாதன் டெக்ஸ்டைல்ஸ் அய்.பி..,

சனாதன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்துள்ளது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,300 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக, விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரீமியம் வாயிலான வருவாய்

கடந்த ஆண்டு டிசம்பரில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வாயிலான வருவாயில் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி, 24 ஆயிரத்து, 466 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில், மொத்தம் 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் 24 ஆயிரத்து, 383 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment