ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெல்பர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்,ஒரு பழைய மருந்தை கோவிட் தடுப்புக்கு பயன்படுத்தலாம் என கூறுகின்றனர். இதற்கான சோதனை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
கோவிட் தொற்று மூக்கில் துவங்குகிறது. மூக்கிலுள்ள ஹெபரான் சல்பேட் என்ற மூலக்கூறுகளுடன் கரோனா வைரஸ் எளிதில் கலந்து, மனித செல்களை தொற்றத் துவங்குகிறது.
இதை தடுக்க ரத்தம் உறையாமல் காக்க உதவும் ஹெபாரின் என்ற மருந்து உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த மருந்தும், ஹெபரான் சல்பேட் போலவே தோற்றம் கொண்டது.
எனவே, கரோனா வைரஸ் அதனுடன் கலந்தால் அது செயலிழந்துவிடும் என துவக்க கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உறுதி செய்யப்பட்டால், மூக்கு வழியே ஸ்பிரே செய்யும் எளிய கரோனா தடுப்பு அரண் நமக்குக் கிடைக்கும்.
No comments:
Post a Comment