வடநாட்டின் பல மொழிகளிலும் பெரியாரைக் கொண்டாடும் இளைஞர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 1, 2022

வடநாட்டின் பல மொழிகளிலும் பெரியாரைக் கொண்டாடும் இளைஞர்கள்

 

தந்தை பெரியார் எழுதிய இராமாயணம் பாத்திரங்கள் நூல், சச்சி ராமாயணம் என்ற பெயரில் இந்தியில் வெளிவந்தது. அந்நூலை வங்கமொழியில்  சத்யராமாயணா மற்றும் அதன் கதாபாத்திரங்கள் என்ற பெயரில் சுப்ரியோ பந்ததோபத்யாய் வங்கமொழி ஊடகவியலாளர் மொழி பெயர்த்துள்ளார். இந்நூல் அய்யா நினைவு நாள் அன்று வங்க இளைஞர்களால் அதிகம் சமுகவலைதளங்களில் பகிரப்பட்டது.

வெளிநாட்டவர்கள்  விண்கலங்களை பிற கிரகங்களுக்கு விட்டுக்கொண்டு இருக்கும் போது நாம் என்றோ இறந்துபோன நமது மூதாதையர்களுக்கு பார்ப்பான் மூலம் அரிசி, பருப்பு வேட்டி சேலை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்று பீகாரைச் சேர்ந்த அம்பேத்கரியஸ்ட் விவேக் பிரசாத் என்பவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சூரஜ் அதீடா என்பவர் “பெரியார் இவரது பெயரே போதும், வட இந்தியாவில் இவரது சிந்தனைகளைக் கொண்டு சேர்க்கும் போது நாமும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச்செல்ல முதல் படியாகும்“ என்று இந்தியில் எழுதியுள்ளார். 

 மராட்டியரான சாகர் என்பவர் எழுதும் போது “பார்ப்பனியம் நம்மை மூடநம்பிக்கையில் மூழ்க வைத்து முட்டாள்களாக மாற்றுகிறது, இதன் மூலம் பார்ப்பனர்கள் சுகபோகவாழ்க்கை வாழ்கின்றனர். உன்னை சூத்திரன் என்று கூறி விலக்கி வைக்கிறார்கள், “உங்களை எச்சரிக்கிறேன் பார்ப்பனியத்தின் பிடியில் சிக்கிவிடாதீர்கள்” என்று பெரியாரின் சிந்தனையை இந்தியில் எழுதியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில பகுஜன் சமாஜ்வாதி  கட்சியை சேர்ந்த பிண்டு ஜாதவ் என்பவர், “திராவிட இயக்கத்தின் தந்தையும் - ஏமாற்றும் பார்ப்பனியம், மூடநம்பிக்கை இவைகளுக்கு கடுமையான எதிரியுமான, பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்ந்து அவரது சிந்தனைகளை அனைவரிடத்திலும் கொண்டு செல்வோம்“ என்று எழுதியுள்ளார்.

ஹரியானாவை சேர்ந்த சஞ்சீத்பர்மன் பெரியார் படம் & சிலைகளைப் போட்டு “உங்களது சிந்தனையை நான் சந்திக்கும் அனைத்துமனிதர்களிடமும் கொண்டு செல்வதே எனது வாழ்க்கையின் குறிக்கோள்” என்று எழுதியுள்ளார்.

பகுஜன் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள பதில் பெரியார், அம்பேத்கர் படத்தோடு, “நமது நாட்டிற்கு விடுதலை எப்போது வரும் என்றால் மூடநம்பிக்கை, தீமை, ஜாதிக்கொடுமை, இன்ன பிற சமூகத்தீங்கிலிருந்து விடுதலை பெறும் போதுதான்! திராவிட இயக்கத்தின் தலைவர், மூடநம்பிக்கையாளர்களின் எதிரி, சமூகசீர்த்திருத்தவாதி பெரியார் (ஈ.வெ.ராமசாமி நாயக்கர்) நினைவு நாளில் அவரை வணங்குகிறோம் என்று பதிவிடப்பட்டுள்ளது. சந்தீப்குமார் நேதாஜி என்பவரும் இதையே பதிவிட்டுள்ளார்.

 


பெரியார் இவர் பெயரே போதுமானது மனுவாதிகளை விரட்டி அடிக்க, சமூக சீர்திருத்தச்செம்மல் பெரியார் நினைவு நாளில் அவரை வணங்குகிறோம் என்று எழுதியுள்ளார் - பவன்குமார், வழக்குரைஞர்,






     

No comments:

Post a Comment