அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியிடங்கள்

செங்கல்பட்டு மாவட்ட சுகாதார மய்யத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகவியலாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பதிவில் இப்பணிக்கான அனைத்து தகவல்களும் தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனம்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், செங்கல்பட்டு.

பணியின் பெயர்;  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூகவியலாளர்

பணியிடங்கள்           11

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.01.2022

விண்ணப்பிக்கும் முறை   Offline

அரசு காலிப்பணியிடம் :

சுகாதார மய்யத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்  மற்றும் சமூகவியலாளர் பணிகளுக்கு மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப் பிரிவில் 10 / 12/ Diploma/ BA/ B.Sc/ BCA/ B.Com/ M.Com/ LLB Ü™ô¶ Graduation/ Post Graduation கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

இப்பணிக்கு விண்ணப்ப தாரர்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், மேலும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 62 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது பதவியின் அடிப்படையில் மாதம் ரூ.8,000/- முதல் ரூ.21,000/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்படும்.

 தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்ப தாரர்கள் INTERVIEW மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

 மேலும் விவரங்களுக்கு:https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2022/01/2022011054.pdf


No comments:

Post a Comment