'விடுதலை' நாளிதழ் சனவரி 7 அன்று வெளியான, நீதிமன்றங்கள் மயிலிறகால் வருடலாமா? தலையங்கம் வாசித்தேன். மக்களாட்சி நடைபெறாமல் மதவாத (வெறி)ஆட்சி தானே தற்போது நடந்து வருகிறது. அதனால் தான் காளிச்சரண் போன்ற சாயம் போன சாமியார்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள இப்படி ஒரு வன்முறை பேச்சில் இறங்கியுள்ளனர்.
இனி இப்படி பேச மாட்டேன் என்ற உறுதி மொழியோடு பிணையில் வந்தாலும், நடப்பது நமது மதவெறி ஆட்சி என்ற இறுமாப்பு, காளிச்சரண் போன்ற சாமியார்களை மேலும் வன்முறை செய்கை யில் ஈடுபடத் தான் செய்யும். எனவே மதவாத அமைப்புகள், சாமியார்கள் அமைப்பு போன்றவற்றை அடியோடு தடை செய்ய வேண்டும்.
மதம் என்ற சாயத்தில் மூழ்காமல், மதச்சார்பற்ற அரசு என்ற உறுதிமொழியை காக்க ஒன்றிய அரசு முயற்சிக்க வேண்டும். சிறுபான்மையினர் நலனில் அக்கறையோடு இருந்தால் தான், சர்க்கரையாக இனிக்கும் இந்த அரசு. இல்லையெனில் கறை படிந்தஅரசாகத் தான் இருக்கும் காலம் முழுவதும்.
சாமியார்கள் என்றாலே ஏமாற்றுப் பேர் வழிகள் தான், இவர்களால் ஒற்றுமை, சம உரிமை கிடைக்கப் போவதில்லை. இதுபோன்ற சாமியார்களை அடி யோடு ஒழித்திட உறுதிகொள்ளவேண்டும்.
சாமியார்களுக்கு ஆமாம் சாமி போடும் ஆசாமி அரசு மதவாத களைகளை அகற்ற முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது தான் மக்களாட்சி சிறந்து விளங்கும்.
- மு.சு.அன்புமணி
No comments:
Post a Comment