ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக அதிக தளர்வுகள் இல்லை: தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக அதிக தளர்வுகள் இல்லை: தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவிப்பு

சென்னை, ஜன.2 ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக அதிக தளர்வுகள் அளிக்க விரும்பவில்லை என தமிழ்நாடு சுகாதார துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனாவின் புதிய வகையான ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. 

நேற்று (1.1.2022) வரை மொத்தம் 1,431 பாதிப்புகள் பதிவாகி உள்ளன.  நாள்தோறும் பதிவாகும் கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டி நேற்று முன்தினம் 1,155 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,48,045.  சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,62,990 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குண மடைந்தோர் எண்ணிக்கை 27,03,799 ஆகும்.

இந்த சூழலில், முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் கிடையாது.  திரையரங்குகளில் 50 சதவீத பார்வை யாளர்களுக்கு மட்டுமே அனுமதி, திருமணம், துக்க நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு சுகா தாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஒமைக்ரான் பரவ வாய்ப்பு உள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒமைக்ரான் பரவுவதால் அதிக தளர்வுகள் அளிக்க தமிழ்நாடு அரசு விரும்பவில்லை.

 ஒமைக்ரான் பாதித்தவர்களில் பலர் மருத்துவ மனைகளில் அனு மதிக்கப்பட வில்லை.

அவர்களுக்கு கரோனா கவனிப்பு மய்யத்தில் சிகிச்சை அளிக்கப்படு கிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment