போர்விமான டயர் திருட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 1, 2022

போர்விமான டயர் திருட்டு

இப்போது முழு ரயிலையே திருடுகிறார்கள் 

 

பீகார் மாநிலத்தில் ரயில்வே துறையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், போலி ஆவணங்களைக்கொண்டு ரயில் என்ஜினை விற்பனை செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தில் லோகோ டீசல் ஷெட்டில் பொறியாளராக பணியாற்றி வருபவர் ராஜீவ் ரஞ்சன் ஜா. இவர் அந்த கோட்டத்தைச் சேர்ந்த  பூர்ணியா நீதிமன்ற ரயில் நிலையம் அருகே பல ஆண்டுகளாக நின்று கொண்டு இருந்த சிறிய நீராவி என்ஜினை போலி ஆவணங்கள் மூலம் பழைய இரும்பு வியாபார தரகருக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த விற்பனை கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதையடுத்து எஞ்சினை உடைத்து  எடுத்துச்செல்ல இரும்பு வியாபாரி வந்தபோதுதான், இந்த பலே மோசடி தெரியவந்தது. இது  ரயில்வே துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ராஜீவ் ரஞ்சன் ஜாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, இந்த ரயில் என்ஜினை உடைக்கவோ, விற்பனை செய்யவோ  ஏதேனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்த போது அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உடைக்கப்பட்ட ரயில் என்ஜின் பாகங்கள், அது சேமித்து வைக்கப்படும்  டீசல் ஷெட்டிற்கும் வரவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட பொறியாளர் ராஜீவ் ரஞ்சன் ஜா,  அவருக்கு உடந்தையாக இருந்த ரயில் நிலைய பாதுகாவலர், ஊழியர்கள் என மொத்தம் 7 பேரை கைது செய்த காவல்துறை, அவர்கள்மீது ரயில் என்ஜினை மோசடி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து,  சம்பந்தப்பட்ட ரயில்வே பொறியாளர் ராஜீவை ரயில்வே நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

 நவம்பர் இறுதிவாரம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் விலை உயர்ந்த டயர் பாகத்தை திருடிச்சென்ற நிகழ்வு ராணுவத்தின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிய நிலையில் தற்போது சுமார் 17000 கிலோ எடை கொண்ட ரயில் என்ஜினையே திருடி விற்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment