கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு தொடரும் புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு தொடரும் புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை

 

வெலிங்டன், ஜன. 18- -பசிபிக் பெருங் கடல் பகுதியில் உள்ள டோங்கோ நாட்டில் கடலுக்கடியில் இருந்த எரிமலை வெடித்துச் சிதறி, 'சுனாமி' அலை தாக்கியது, உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய் துள்ளது.

'இங்கு இது போன்ற எரிமலை வெடிப்பு தொடரும்' என புவியியல் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.பசிபிக் பெருங்கடலில் அமைந் துள்ள குட்டி நாடு டோங்கோ. இங்குள்ள ஹங்காஹபாய் மற்றும் ஹங்காடோங்கா தீவுகளில் அடிக் கடி எரிமலை வெடிப்பு ஏற்படும். இங்கு கடல் மட்டத்தில் இருந்து, 300 அடி உயரமுள்ள ஒரு எரிமலை உள்ளது. ஆனால் கடலுக்கு அடியில் 5,900 அடி உயரமும், 20 கி.மீ., தூரத்துக்கும் மிகப் பெரிய எரிமலையாக பரந்து விரிந்திருந் தது. இந்த எரிமலை சமீபத்தில் வெடித்து சிதறியது.

இதன் தொடர்ச்சியாக டோங் கோவில் உள்ள குட்டித் தீவுகளை சுனாமி அலை தாக்கியது. குடி யிருப்பு பகுதிக்குள் கடல் நீர் புகுந்த காட்சிப் பதிவுகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து புவியியல் நிபுணர்கள் கூறி யுள்ளதாவது: வழக்கமாக கடலுக் கடியில் இருக்கும் எரிமலைகள் வெடிக்கும்போது பாறைக் குழம் புகள் கடல் நீரில் படும்போது, அந்த சூட்டில் ஆவி உருவாகி, பாறைக் குழம்புகளின் வெப்பத்தை தணிக்கும். 1,200 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருந்தாலும், எரி மலைக் குழம்பை கடல் நீர் தணிய வைத்துவிடும்.

ஆனால் தற்போது எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது. ஒரே நேரத்தில் நிறைய எரிமலைக் குழம்பு உருவானதால், அதை உட னடியாக தணிக்க முடியவில்லை. அந்தக் குழம்புகள் மீண்டும் எரி மலை பள்ளத்துக்குள் சென்று வெடிப்பை அதிகரித்துள்ளன. இது போன்ற சம்பவம் 1,000 ஆண் டுகளுக்கு ஒரு முறை நிகழும். டோங்கோவில் அடுத்த சில ஆண் டுகளில் இது போன்ற தொடர் எரிமலை வெடிப்புகள் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையே எரிமலை வெடிப்பு காரணமாக பசிபிக் கரையோர பகு திகளில் சுனாமி அலைகள் எழுவது குறைந்துள்ளது. ஆனாலும் கடல் பகுதியில் கடுமையான புகை மூட் டம் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment