தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.
இதன் ஒரு கட்டமாக சென் னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் நேற்று (19.1.2022) அங்கீகரிக்கப் பட்ட அர சியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட் டம் நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார் தலைமை தாங்கினார். தேர்தல் ஆணைய செய லாளர் எ.சுந்தர வல்லி, மாவட்ட தேர்தல் அதி காரியும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணை யருமான ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிகளின் ஆணையர் ஆர்.செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன் னையா, மாநகராட்சி துணை ஆணையர் விசுமகாஜன், முதன்மை தேர்தல் அதிகாரி கு.தனலட்சுமி உள்பட அதிகாரி களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் வழக்குரைஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன், சுந்தர் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. சார்பில் மேனாள் துணை பேரவைத் தலைவர் பொள்ளாச்சி ஜெய ராமன், மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., வழக்குரைஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல், காங்கிரஸ் சார்பில் துணைத்தலைவர் தாமோதரன், வழக்குரைஞர் பிரிவு நிர்வாகி நவாஸ், பா.ஜ.க. பொதுச் செய லாளர் கரு.நாகராஜன், சென் னை மண்டல தேர்தல் கோட்ட பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், தே.மு.தி.க. சார் பில் முன்னாள் எம்.எல்.ஏ. நல்ல தம்பி, பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயினார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏழுமலை, திரி ணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஹக்கிம்ஸ், மணிசங்கர், பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் மாநில செய லாளர் சார்லஸ், மணிசங்கர், தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி உள்பட அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டம்
இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எப் போது நடத்துவது? தேர்தல் விதிமுறைகள் என்னென்ன? கரோனா சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கையா ளுவது, தேர்தல் தொடர்பான சட்டதிட்ட விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுடன் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கட்சி பிரதிநிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் கேட்டார்.
இந்த ஆலோசனை கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடி வடைந்தது. முன்னதாக ஆலோ சனை கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனி குமார் பேசுகையில், அரசியல் கட்சி களின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் ஆணையத்தால் பரிசீலிக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதி யாகவும், நேர்மையாகவும், சுதந் திரமாகவும் நடத்திட அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண் டும், என்றார்.
ஆட்சியர்களுடன் ஆலோசனை
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி யதை தொடர்ந்து மாலையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண் காணிப்பாளர் களுடன் காணொலி காட்சி மூலமாக மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தேர்தல் தொடர் பான பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்கினார். கருத்து களையும் கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment