ஒன்றிய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.அய்.,) பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: மகாராட்டிரா 594, டில்லி 557, தமிழ்நாடு 385, மேற்குவங்கம் & சிக்கிம் 320, கருநாடகா 282, ஆமதாபாத் 269, பஞ்சாப் 188, ராஜஸ்தான் 187, அரியானா 185, உ.பி., 160, கேரளா 130, மத்திய பிரதேசம் 102 உட்பட மொத்தம் 3847 இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள காலியிடத்தில் யு.டி.சி., 150, எம்.டி.எஸ்., 219, ஸ்டெனோ 16 என மொத்தம் 385 இடம் உள்ளது.
கல்வித்தகுதி : யு.டி.சி., பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி, ஸ்டெனோ பிளஸ் 2, தட்டச்சு பயிற்சி, எம்.டி.எஸ்., பதவிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது : 15.2.2022 அடிப்படையில் எம்.டி.எஸ்., பணிக்கு 18 - 25, மற்ற பதவிகளுக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, தட்டச்சு தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. மாற்றுத் திறனாளி, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250. கடைசிநாள் : 15.2.2022
விபரங்களுக்கு: www.esic.nic.in/recruitments/index/page:1
No comments:
Post a Comment