சென்னை, ஜன.12 முதன்மையான வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வளர்ந்து வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான சிறீநிதி கேபிட்டல் பிரைவேட் நிறுவனம் இந்தோஸ்டார் கேப்பிட்டல் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து இணை கடன் வழங்கும் வசதியாக ரூ.300 கோடியை திரட்டியுள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனதலைமை நிர்வாக அதிகாரி எஸ். செல்லமணி
கூறியிருப்பதாவது:
“ஒரு பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்த துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் கடுமையாக போராடிக் கொண்டிக்கும்போது, “விரைவான வளர்ச்சி, தொழில்துறை வசூல் தொகை ஆகியவை அந்த பெரிய நிறுவனங்களுக்கு இணையாக உள்ளதால் ஒட்டு மொத்த தொழில் துறையினரின் கவனத்தையும் இந்நிறுவனம் ஈர்த்துள்ளது.
இந்த கூட்டணி மூலம் 2022 ஆம் ஆண்டில் சிறிய ரக வாகனங்களை இயக்கும் நிறுவனங்கள், உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் வங்கிகள் மற்றும் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற முடியாத கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.400 கோடிகளை வழங்க திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment