சென்னையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு மருந்து தொகுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 17, 2022

சென்னையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு மருந்து தொகுப்பு

சென்னை, ஜன.17 சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு நேற்று (16.1.2022) முதல் மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னையில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளும் நபர்களுக்கு மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் மருந்து தொகுப்பு  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து காத்திருப்போருக்கு முடிவுகள் வரும்முன்பே மருந்து தொகுப்பு வழங்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த மருந்து தொகுப்பில் வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டமால் மாத்திரைகள், கபசுர குடிநீர், 3 அடுக்கு முகக்கவசம் போன்றவை வழங்கப்படுகின்றன.

வீடுகளில் தனிமைப்படுத்துதலில் இருப்போரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கும் மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment