மும்பை, ஜன. 2- மனிதநேய போராளி தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 48 வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 24.12.2021 மாலை 7மணி அளவில் மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் மும்பை தாராவி பெரியார் சதுக்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மும்பை திராவிடர் கழகத் தலை வர் பெ.கணேசன் தலைமை வகித்தார். கழகத்தின் மூத்த உறுப்பினர் சோ.ஆசைத் தம்பி தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணி வித்தார். கடவுள் மறுப்பு கூறி வந்திருந்த அனைவ ரையும் மும்பை திரா விடர் கழக செயலாளர் அந்தோணி வரவேற்றார். கூட்டத் தலைவரின் தலைமை உரைக்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் தாராவி கிளைச் செயலாளர் ஞான அய் யாப்பிள்ளை, மனிதநேய அமைப்பைச் சார்ந்த சங்கர் திராவிடர், சமூக நலத் தொண்டர் பி.பி. கோகரே, ஜெய் பீம் அறக் கட்டளை தோழர்கள் ராஜா குட்டி, சுரேஷ் குமார், மகிழ்ச்சி மகளிர் பேரவை அமைப்பின் நிர்வாகிகள் இ.வனிதா, க.வளர்மதி பெரம்பலூர் மாவட்ட தோழர் தேவேந் திரன், கழகத் தோழர் பெரியார் பாலாஜி ஆகி யோரின் உரைக்குப் பிறகு மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இர விச்சந்திரன் இறுதியாக உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மும்பை மாநகர திராவிட முன் னேற்றக் கழக மூத்த தலை வர் என்.வி.சண்முகராசன் இரா.இராசேந்திரன், கே.குணசேகர், இரா.செ. குமார், எச்.சேர்மதுரை, த.நல்லையாகுமார், பெரியார் பிஞ்சு அறிமலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மும்பை திக பொருளா ளர் அ.கண்ணன் நன்றி யுரைற்றினார்.
No comments:
Post a Comment