சுயமரியாதைச் சுடரொளி வ.சு.சம்பந்தம் நினைவு நாள் படத்திற்கு மாலை அணிவிப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

சுயமரியாதைச் சுடரொளி வ.சு.சம்பந்தம் நினைவு நாள் படத்திற்கு மாலை அணிவிப்பு - நினைவேந்தல்

புதுச்சேரி, ஜன. 18- முது பெரும் பெரியார் பெருந் தொண்டரும், புதுச்சேரி திராவிடர் கழகத்தின் மேனாள் தலைவரும் புதுச் சேரி சமூகநீதிப் பேரவை அமைப்பாளருமான அய்யா .சு.சம்பந்தம் அவர் களின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் 16.12.2021 அன்று காலை 10 மணி அளவில் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தத்துவ தலைவர் தந்தை பெரியார் சிலைக்கு புதுச் சேரி மாநில மேனாள் பகுத்தறிவாளர் கழக செய லாளர் கோ.மு.தமிழ்ச் செல்வன் மாலை அணி வித்தார். புதுச்சேரி மாநில மேனாள் கழக செயலா ளர் வே.அன்பரசன் வீர வணக்க முழக்கமிட்டார். நினைவேந்தல் நிகழ்வுக்கு புதுச்சேரி மாநில திரா விடர் கழக தலைவர் சிவ. வீரமணி தலைமை தாங் கினார். .சு.சம்பந்தம் படத்திற்கு மண்டல கழக செயலாளர் கி.அறிவழ கன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந் திய கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி மாநில துணைப் பொதுச் செய லாளர் தோழர் து,கீதநா தன் வீரவணக்க முழக்க மிட்டு நிகழ்ச்சியை ஒருங் கிணைப்பு செய்தார். முத லாவதாக ஒரு நிமிடம் அமைதி கடைப் பிடிக்கப் பட்டது. புதுச்சேரி மாநில  சமூக நீதி பேரவை அமைப் பாளரும், புதுச்சேரி வரு மான வரி அதிகாரியும், சீரிய சிந்தனையாளரு மான நவீன் தனராமன் சமூக நீதிப்பேரவை செயல் பாடுகள், அதில் சம்பந்தம் அய்யா, மேனாள் வேளாண் துறை அமைச்சர் இரா.விசுவநாதன் ஆகியோ ரின் பணிகளையும், சமூக நீதிப் பேரவை சாதித்த சாதனைகளையும் பட்டி யலிட்டு உரையாற்றினார்.

புதுச்சேரி சமூகநீதி பேரவையின் செயல்பா டுகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் து.கீதநாதன் நினைவேந்தல் உரைக்குப் பின் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி சுய மரியாதைச் சுடரொளி சம்பந்தம் அவர்களால் அறிமுகமாகி திராவிடர் கழகத்தில் தன்னை முழு மையாக இணைத்துக் கொண்டதாகவும், பெரியார் படிப்பக கட் டட கட்டுமான பணிக ளில் சம்பந்தத்தோடு தொடர்ந்து பணியாற்றி யதாகவும் பெரியார் வழி யில் ஆசிரியர் கட்டளைக் கேற்ப மறைந்த சம்பந்தம் விட்டுச்சென்ற இயக்கப் பணிகளில் தொடர்ந்து தொய்வின்றி செயல்படு வதுதான் அவருக்கு செய்யும் பெருமை, புகழ் வணக்கம் என நினைவேந் தல் உரையாற்றினார். இறுதியாக வே.அன்பர சன், கோ.மு.தமிழ்ச்செல் வன் ஆகியோர் வீரவணக்க  முழக்கமிட்டனர். நிகழ் வில் கலந்து கொண்டு சம் பந்தம் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தவர் கள், எழுத்தாளரும் கவி ஞருமான சீனு.தமிழ்நெஞ்சன், மூளைக்குளம் இரா.சாம்பசிவம், பெ.ஆதிநா ராயணன், களஞ்சியம் வெங்கடேசன், செழியன், அரியாங்குப்பம் கொம்யூன் கழக தலைவர் இரா.ஆதிநாராயணன், புதுச்சேரி நகராட்சி கழக அமைப்பாளர் மு.குப்பு சாமி, புதுச்சேரி கழக இளைஞரணி தலைவர் திராவிட இராசா, செ.கா.பாஷா, புதுச்சேரி திராவிடர் கழக மண்டல துணைத் தலைவர் வீர. இளங்கோவன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் பா.குமரன், .சிவராசன் ஆகியோர் கலந்து கொண் டனர். கீதநாதன் நன்றி கூறினார்.

முன்னதாக .சு.சம் பந்தம் இல்லத்தில் அவரு டைய படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சம்பந்தம் அவர்களின் மகன் ஜெனோ மாறன் பில்டர்ஸ் .தங்கமணி மாறன், அய்யாவின் துணை வியார் மீனா சம்பந்தம், பேத்தி கயல்விழி அண்ணா துரை, கழகத் தோழர்கள் சு.துளசிராமன், வே.அன் பரசன், கோ.மு.தமிழ்ச் செல்வன், துரை.சிவாஜி சா.முகேஷ் இராவணன் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அரி யாங்குப்பம் கே குமார் சேகா பாஷா கோகுல் காந்தி ஆகியோர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத் தினர். மீனா சம்பந்தம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment