புதுடில்லி, ஜன.12 டில்லியில் தனியார் அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட் டுள்ளது. மேலும், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள் ளனர்.
தலைநகர் டில்லியில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. அங்கு ஒரே நாளில் 19 ஆயிரத்து 166 பேருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.
இதற்கிடையில், வைரஸ் பரவல் காரணமாக டில்லியில் ஏற்கெனவே அரசு மற்றும் தனியார் அலுவல கங்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல் பட்டு வருகிறது. அதேபோல், உணவ கங்கள், பார்கள் 50 சதவிகித வாடிக்கை யா ளர்களுடன் செயல் பட்டு வரு கின்றன. இந்நிலையில், வைரஸ் பரவல் அதி கரித்து வருவதால் டில்லியில் செயல் பட்டு வரும் தனியார் அலு வலகங்களை மூட மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தர விட்டுள்ளது.
மேலும், தனியார் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
உணவகங்களில் இருந்து சாப்பிட அனுமதி இல்லை என்ற போதிலும் உணவு வழங்கல் மற்றும் உணவை வாங்கிச்செல்லும் நடைமுறைக்கு அனுமதி உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment