உக்ரைன்: அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை தோல்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

உக்ரைன்: அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை தோல்வி

வாசிங்டன், ஜன. 18- உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யா, அமெரிக்கா மற்றும் அதன் அய்ரோப்பிய நட்பு நாடுகளுடன் கடந்த வாரம் நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதனால் பேர ழிவு தரக்கூடிய மோதலை தவிர்ப் பதில் இன்னும் சிக்கல் ஏற்பட்டுள் ளது.பழைய சோவியத் ஒன்றியத் தில் ரஷ்யாவும், உக்ரைனும் ஒன்றி ணைந்த பகுதிகளாக இருந்தன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக் குப் பின் இவை தனித்தனி நாடு களாக பிரிந்தாலும், உக்ரைனில் அதிகளவில் ரஷ்ய மொழி பேசும் மக்களே வசிக்கின்றனர்.

ஆனாலும், உக்ரைன் அரசு அய் ரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டு சேர்வதிலேயே ஆர்வமாக இருந்து வருகிறது. ரஷ்யாவுக்கும் அய்ரோப் பிய ஒன்றியத்துக்கும் இடையில் உக்ரைன் அமைந்துள்ளது.இத னால், அய்ரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைன் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றன. உக் ரைனில் கால்பதிப்பதன் மூலம் ரஷ் யாவை நெருங்க முடியும், அதன் மூலம் ரஷ்யாவுக்கு அழுத்தம் தர முடியும் என நினைக்கின்றன. இதனாலேயே பல பொருளாதார சலுகைகளைக் காட்டி, அமெ ரிக்கா, கனடா மற்றும் 28 அய்ரோப் பிய நாடுகள் கொண்ட நேட்டோ அமைப்பில் சேர உக்ரைனை தூண்டுகின்றன. இந்த அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அமெரிக்க, அய்ரோப்பிய படைகள் உக்ரை னில் பாதுகாப்பு என்ற பெயரில் குவிக்கப்படும்.

இது தனது நாட்டிற்கு நேரடி ஆபத்தாக அமையும் என ரஷ்யா கருதுகிறது. இதனால், எக்காரணம் கொண்டும் உக்ரைன், அய்ரோப் பிய ஒன்றியத்துடன் சேருவதை ரஷ்யா விரும்பவில்லை. அதே சம யம், உக்ரைனை தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கவே ரஷ்ய அதிபர் புடின் விரும்புகிறார். சமீப காலமாக, அய்ரோப்பிய ஒன்றியத் துடன் சேரும் தனது விருப்பத்தில் உக்ரைன் தீவிரம் காட்டுவதால், அதை மிரட்டும் வகையில் அதன் எல்லையை ஒட்டி ரஷ்யா ஒரு லட்சம் வீரர்களை குவித்துள்ளது. பல நவீன ஆயுதங்களையும் நிலை நிறுத்தி உள்ளது.

நேட்டோவுடன் இணைய உக்ரைன் நடவடிக்கை எடுத்தால், ராணுவ நடவடிக்கைகள் மூலமாக அந்நாட்டை கைப்பற்ற தயார் நிலையில் ரஷ்ய படை உள்ளது. இதற்கு அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உக் ரைனை தாக்கினால், அதன் விளை வுகள் பயங்கரமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்ச ரித்துள்ளார்.

இதனால், உக்ரைன் விவகாரம் பன்னாட்டு பிரச்னையாக உருவெ டுத்துள்ளது. இப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ரஷ்யா, அமெரிக்கா மற்றும் அதன் அய்ரோப்பிய ஒன்றிய கூட்டு நாடுகள் முடிவுகள் செய்துள்ளன. இது தொடர்பாக கடந்த வாரம் புடினும், பைடனும் காணொலி மூலமாக நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது தோல்வியில் முடிந்துள் ளது. உக்ரைன் பிரச்சினையில் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், உக் ரைன் விவகாரத்தில் முடிவு ஏற்படு வதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதால், இந்த விவகாரம் உக்கிரமாகி வரு கிறது. இதற்கு ராணுவ ரீதியாக தீர்வு காண வேண்டிய சூழல் ஏற் பட்டால், அது உலகின் மிகப்பெரிய பேரழிவுக்கு வழி வகுக்கும் அபாயம் உள்ளது.

No comments:

Post a Comment