குமாரக்குடியில் தந்தை பெரியார் நினைவு கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 17, 2022

குமாரக்குடியில் தந்தை பெரியார் நினைவு கருத்தரங்கம்

குமாரகுடி, ஜன. 17- தந்தை பெரியார் 48ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங் கம் 24.12.2021 அன்று மாலை 5.30 மணிக்கு, குமாரக்குடி சுயமரியா தைச் சுடரொளி துரை.மீனாட்சிசுந்தரம் வளா கத்தில் நடைபெற்றது. 

மாவட்ட இளைஞ ரணி செயலாளர் சிற்பி.சிலம்பரசன் வரவேற்பு ரையாற்றினார். குமார குடி கழக தலைவர் நெல் இரா.செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கோவி.பெரியார்தாசன், பொதுக் குழு உறுப்பினர் சுமதி பெரியார்தாசன், ஆறுமு கம் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். ப.க. மாவட்ட செயலாளர் கோ.நெடு மாறன் உரையாற்றினார். 

மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன், தமிழ்நாடு வாழ்வுரிமைக்கட்சி உயர் நிலைக் குழு உறுப்பினர் மு.பாலகுருசாமி ஆகி யோர் உரையாற்றிய பின் னர், இணைச் செயலாள ரும், கழக செயலாளரு மான யாழ்.திலிபன் சிறப் புரையாற்றினார். தந்தை பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் மதவாதிகள் - மதவெறியர்கள் - இந்துத் வாவாதிகள் பெரியாரின் சிறப்புகளைக் கண்டு மிர ளுகின்றனர். பெரியார் வாழ்க காலத்தை அவரின் மறைவுக்கு பின்னர்தான் அவர் சமுதாயத்திற்கு மிக வும் தேவைப்படுகிறார். பெரியார் சிலையை கண்டே மிரளுகின்றனர் என்று பெரியாரின் சிறப் புகளை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் ஆண்டிப் பாளையம் பஞ்சநாதன், ஆண்டிபாளையம் முரு கன், முனைவர் கோபி நாத், காட்டு மண்ணை ஆனந்த பாரதி, வலசக் காடு வீரமணி, குமாரகுடி சிவா, வி.சி.க. அன்புதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இறுதியில் மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் நன்றி கூற 8.30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது.

No comments:

Post a Comment