மாணவியருக்கு குழந்தைத் திருமணம் நடக்காமல் கண்காணிக்க வேண்டும் தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 12, 2022

மாணவியருக்கு குழந்தைத் திருமணம் நடக்காமல் கண்காணிக்க வேண்டும் தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவு

சென்னை, ஜன.12 ‘பள்ளி மாணவி யருக்கு குழந்தை திருமணம் நடக் காமல் கண்காணிக்க வேண்டும்என, முதன்மை கல்வி அலுவலர் களான சி...,க்களுக்கு உத்தர விடப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி பிறப் பித்துள்ள உத்தரவு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆறு ஆண்டுகளில் 3,326 இளம் வயது கருத்தரிப்பு நடந்து உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதை யடுத்து, மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை மேற்கொண்டு, குழந்தை திருமணங்கள் கட்டுப்படுத்தப் பட்டன.

அதனால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இளம் வயது கருத்தரிப்பு குறைந்து உள்ளது. எனவே, மாணவியருக்கு குழந்தை திருமணம் நடக்காமல், பள்ளிகளில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, குழந்தை திருமணம் கூடாது என்பது குறித்து, பள்ளி களில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், 14 முதல் 18 வயது வரையுள்ள மாணவியர், தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளிக்கு வரா விட்டால், ஆசிரியர்கள் அவர்களை கண்காணித்து, குழந்தை திருமணம் நடந்துள்ளதா என்று விசாரிக்க வேண்டும்.

இது குறித்து, 1098 என்ற குழந் தைகள் உதவி மய்ய எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். மேலும், அரசு அதிகாரி களுடன் இணைந்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும்.

இவ்வாறு உத்தரவில் கூறியுள் ளார்.

No comments:

Post a Comment