நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு

முதலமைச்சர் மு.. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை,ஜன.3- தமிழர் திருநாளான பொங்கல் விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்தார்.  

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங் களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப் பட்டன. குறிப் பாக இந்த பரிசுத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நெய்ஆவின்நிர்வாகத் திடம் இருந்து கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. பின்னர் பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டு கடந்த வார இறுதி யில் அந்தந்த நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கரோனா தொற்று பரவல் அதிக ரித்து வரும் நிலையில் அரசின் வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை வினியோகிக்க வேண் டும் என்று நியாய விலைக்கடை பணி யாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது. பொங்கல் தொகுப்பு பொது மக்களுக்கு நெரிசல் இல்லாமல் வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத் தியுள்ளது. இதற்காக இந்த ஆண்டும் டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது.

 அந்த அடையாளச் சீட்டு பரிசு அடையாளச் சீட்டுகளை பெறுவதற் கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டோக்கன் வினியோகம் செய்யும் பணி இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவுபெறுகிறது.

பொங்கல் பரிசுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் நாளை (4.1.2022) சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து நாளை முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவ தும் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங் கப் படுகின்றன. ஒவ்வொரு நாட்களில் நேரத்தை குறிப்பிட்டு வழங்கப்பட்டி ருக்கும் டோக்கன் அடிப்படையிலும், தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொருட்களை வழங்கவும் கடை ஊழி யர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள் ளது. பொதுமக்களை சமூக இடை வெளி, கிருமி நாசினி, முகக்கவசம் போன் றவற்றை கடைப்பிடிக்க அறிவு றுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கை ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு வழங்கல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வருகிற 10ஆம் தேதிவரை பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது. இந்த நாட்களில் வாங்க முடி யாதவர்கள் 10ஆம் தேதிக்கு பின்னர் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்கி செல்லலாம். பொங்கல் விழா முடிந்த பிறகும் கூட தங்களுக்கான பொருட் களை பெற்றுச்செல்லலாம்என்று தெரிவித்தனர்.

பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள

21 பொருட்களின் விவரம் 

பச்சரிசி - 1 கிலோ

வெல்லம் - 1 கிலோ

முந்திரி - 50 கிராம்

திராட்சை - 50 கிராம்

ஏலக்காய் - 10 கிராம்

பாசிப்பருப்பு - 500 கிராம்

நெய் - 100 கிராம்

மஞ்சள் தூள் - 100 கிராம்

மிளகாய்தூள் - 100 கிராம்

மல்லித்தூள் - 100 கிராம்

கடுகு - 100 கிராம்

சீரகம் - 100 கிராம்

மிளகு - 50 கிராம்

புளி - 200 கிராம்

கடலைபருப்பு - 250 கிராம்

உளுத்தம்பருப்பு - 500 கிராம்

ரவை - 1 கிலோ

கோதுமை மாவு - 1 கிலோ

உப்பு - 500 கிராம்

கரும்பு - 1 (முழுமையானது)

துணிப்பை - 1


No comments:

Post a Comment