'மம்மி'க்கு சி.டி. ஸ்கேன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 20, 2022

'மம்மி'க்கு சி.டி. ஸ்கேன்

எகிப்திய பிரமிடுகளில் 'மம்மி' எனப்படும், பாடம் செய்யப்பட்ட மனித உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். இன்று தொல்லியலாளர்கள் முன் அவை பெரும் சவால்களாக உள்ளன. அவற்றை பிரிக்காமல் முழுமையாக ஆராய்ச்சி செய்ய முடியாது.

பிரித்தால், வரலாற்றுச் சான்றுகள் நிரந்தரமாக சிதைக்கப்படும் ஆபத்து உண்டு. இந்த இடத்தில்தான் முப்பரிமாண 'சி.டி. ஸ்கேன்' தொழில்நுட்பம் உதவிக்கு வந்துள்ளது.கெய்ரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளனர். சி.டி.ஸ்கேன் கருவி, மனித உடலை அடுக்கடுக்காக படம் பிடித்துக் காட்டும் திறன் கொண்டது.

அந்தக் கருவி மூலம், பாடம் செய்த சடலத்திற்கும் பயன்படுத்துவது புத்திசாலித்தனமான ஒரு அணுகு முறை தான்.கி.மு., 1500களில் எகிப்தை ஆண்ட பாரோ அமென்ஹோடெப் - 1 என்ற மன்னரின் மம்மி, அகழாய்வு செய்வோரால் 1881இல் கண்டெடுக்கப்பட்டது. அதை 2019இல் ஆராய்ச்சியாளர்கள் ஸ்கேன் செய்து ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.

மன்னரின் உடலை, 12ஆம் நூற்றாண்டில் கொள்ளையர்கள் தோண்டி எடுத்து தங்க அணிகலன்களை பிரித்தெடுப்பதற்காக, சேதப்படுத்தியிருந்தனர்.அதை சீர் செய்து அக்கால ஆட்சியாளர்கள் பாதுகாத்துள்ளதாக, சி.டி.ஸ்கேன் செய்த ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த மன்னரைப் பற்றி இன்னும் பல புதிய செய்திகள் வெளி வரக்கூடும்.


No comments:

Post a Comment