1) கூடுவாஞ்சேரி (ஆதனூர்) டிடிசி நகர் தோழர் இராசு இல்லத்தில் ஆசிரியர் டிச. 2 சுயமரியாதை நாள் (2.12.2021) அன்று மாலை 5 மணிக்கு தேநீர் விருந்துடன் நமது கழக தோழர்களுடன் கொண்டாடப்பட்டது. அப்போது “இல்லம் சென்று நூல் கள் விற்பனை” - திட்டமும் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையனால் தொடங்கி வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கோ.நாத்தி கன், மோகன்ராஜ், குணசேகரன், ஊரப்பாக்கம் உத்திரக் குமார், ராமண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் இயக்கத் தோழர்கள், அன்பழகன் (அதிமுக) உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
2) டிசம்பர் 24 அய்யாவின் நினைவு நாளன்று கூடு வாஞ்சேரி பெரியார் சிலை அருகில் காலை 8 மணிக்கு “விடுதலை - உண்மை செய்திகள் படியுங்கள்” என்ற செய்தி பதாகை வைக்கப்பட்டு அதன் கீழே விடுதலை - உண்மை (Wall poster) ஒட்டி பெரியார் சிலை, பதாகை களை அலங்கரித்து பெரியார் சிலைக்கு மாலை அணி விக்கப்பட்டது. தோழர் மகாலிங்கம், மா.இராசு மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment