அமெரிக்க அறிவியல் நிபுணர்வாசிங்டன், ஜன. 18- உலக அள வில் கரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அறிவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வாசிங் டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்கு நர் டாக்டர் குதுப் மஹ் மூத், ஏ.என்.அய். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய தடுப்பூசிகள் உலக அளவில் பயன் படுத்தப்படுகின்றன. இந் தியாவில் ஒரு வருடத்திற் குள் 60 சதவீத தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்திய சுகாதாரத்துறை மற்றும் தடுப்பூசி தயாரிப் பாளர்களின் இந்த நட வடிக்கை சிறந்த சாதனை.
கரோனா ஒரு தனித் தன்மை வாய்ந்த வைரஸ் ஆகும், ஏனெனில் இது மிக அதிக மாறுதல்களை கொண்டுள்ளது. கரோனா தொற்று நோய் விரைவில் முடிவுக்கு வரும். இந்த ஆண்டில் தொற்றுநோயிலிருந்து மிக விரைவில் நாம் வெளிவருவோம் என்று நம்புகிறேன். அதன் பரவ லைக் கட்டுப்படுத்த நாம் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு டாக்டர் குதுப் மஹ்மூத் கூறினார்.
No comments:
Post a Comment