ராணுவ நல கல்வி சங்கம் மூலம் நாடு முழுவதும் 137 ராணுவ பப்ளிக் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: ஆங்கிலம், இந்தி, வரலாறு, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகவியல் என பல பிரிவுகளில் மொத்தம் 8700 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.ஜி.டி., (முதுநிலை பட்டம், பி.எட்., படிப்பில் 50 சதவீதம், டி.ஜி.டி., (இளநிலை பட்டம், பி.எட்., படிப்பில் 50 சதவீதம்) பி.ஆர்.டி,. (இளநிலை பட்டம், பி.எட்., அல்லது ஆசிரியர் பயிற்சி படிப்பில் 50 சதவீதம்) என மூன்று பிரிவுகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.
வயது: 1.4.2021 அடிப்படையில் அய்ந்தாண்டு களுக்கு கீழ் ஆசிரியர் பணி அனுபவம் உள்ளவர்கள் 40, அய்ந்தாண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: இணைய ஸ்கிரீனிங் தேர்வு, நேர்முகத்தேர்வு, கற்பித்தல் திறன் மற்றும் கம்ப்யூட்டர் அறிவு.
எழுத்துத்தேர்வு தேதி: 2022 பிப். 19, 20
தேர்வு மய்யம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.385.
கடைசிநாள் : 28.1.2022
விபரங்களுக்கு: https://register.cbtexams.in/AWES/Registration
No comments:
Post a Comment