சென்னை, ஜன. 11- பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இணைந்து நடத்தும் பெரியாரியல் பயிற்சி வகுப்பு [சிறப்பு நோக்கு: பகுத்தறிவு] - 20.12.2021 திங்கள் 9ஆம் நாள் பயிற்சி வகுப்பு அறிக்கை வருமாறு:
பெரியாரியல் பயிற்சி பட்டறை ஒன்பதாம் நாள் வகுப்பு 20.12.2021 திங்கள் மாலை 7.00 மணிக்கு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் கூட்டத்தை அறிவிக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில துணைத் தலைவர் தரும.வீரமணி வரவேற்புரை நிகழ்த்தி, இன்றைய வகுப்பின் பொருள்: பக்தி, பிரார்த்தனை என்றும், பயிற்று நர் வா.நேரு என்றும் கூறி பயிற்சியாளர் களுக்கு கருத்தாளர் பற்றி அறிமுகம் செய்து உரையாற்றினார்.
தனது வகுப்பை தொடங்கிய வா.நேரு, பக்தி பல வகைப் படும். பதி பக்தி, குரு பக்தி என்பன போன்று என்றார். பதி பக்தி என்பது கணவன் மீதான அன்பு, அதீத மரியாதை.
ஆசான் பக்தி அல்லது குரு பக்தி என்பது ஆசான் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும், எதிர்க் கேள்வி கேட்கக் கூடாது என்கிற நிலையில் இருந்தது.
கொஞ்சக் காலம் முன்பு வரை கூட ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தன்னுடைய கணவர் பெயரை சொல்ல மாட்டார்கள்.
இணையர் பெயரை சொல்லும் நிலை
ஆனால் இன்றைக்கு இணையர் பெயரை இருவருமே சகஜமாக சொல்லும் நிலை,
ஆசிரியர் சொன்னாலும் அக்கருத்தை எதிர்வாதம் செய்கின்ற நிலை ஏற்பட்டிருக் கிறது.
மற்றொரு பக்தி கடவுள் மேல் கொள்ளும் பக்தி.
இந்த பக்தி எல்லா மதத்திலும் இருக்கிறது.
பக்தி எதிலிருந்து வருகிறது?
ஆசை, அடுத்தவர் பார்த்து மதிப்பளிப்பது என்பதில் இருந்து வருகிறது. இது மிக முக்கியம்.
உலகத்திலுள்ள மதங்களெல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமி மீது கட்டப்பட்டு உள்ளன. பகுத்தறிவு கொண்டு பார்த்தால் எந்த மதமும் நிலைக்காது. இது தலைவர் தந்தை பெரியார் கூற்று என்பது பற்றி பேசினார்.
பிரார்த்தனை மோசடி
“பிரார்த்தனை மோசடி” என்ற புத்தகத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
டிசம்பர் 20 பன்னாட்டு மனித ஒற்றுமை தினம்.
இந்த மனித ஒற்றுமையை பக்தி சொல் கிறதா என்ற கேள்வியை எழுப்பினார்.
பக்தி வறுமையை ஒழிக்க பயன்படுகிறதா?
பக்தி வேற்றுமையை ஒழிக்க பயன்படு கிறதா ?
பக்தி ஒற்றுமைப்படுத்த பயன்படுகிறதா ?
பக்தி சமூக மேம்பாட்டுக்கு உதவுகிறதா? என்ற வினாவை எல்லாம் எழுப்பினார்.
பக்தி என்பது அடிப்படை ஒழுக்கத்தை வளர்ப்பதாக பெரும்பாலோர் சொல்லு கிறார்கள். அப்படி ஒரு நிலை இருக்கிறதா?
கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற ரிச்சர்ட் டாக்கின்ஸ் நூலை கு.வே.கி ஆசான் அவர்களது மொழி பெயர்ப்பு நூலி லிருந்து விளக்கிக் கூறினார்.
குழந்தைகளுக்கு கடவுள் பக்தி ஒழுக் கத்தை வளர்க்கிறதா? என்றும் குழந்தைகளை பயமுறுத்த பயன்படுத்துகிறது. அவர்களை அச்சமற்றவர்கள் ஆக இருக்க அனுமதிப்ப தில்லை என்ற கருத்தை புத்தர் வைக்கிறார்.
பக்தி பயத்தையே வளர்க்கிறது என்பதை யும் விளக்கிக் கூறினார்.
மதங்கள் மூடநம்பிக்கையை வளர்க்கின்றன
குழந்தைகளுக்கு எல்லா மதங்களும் நரகம் பற்றிய அச்சத்தை கொடுக்கின்றன. இறப்புக்குப்பின் நரகம், மோட்சம் என்ற மூட நம்பிக்கையை கொடுக்கின்றன.
ஆந்திராவில் படித்த, மெத்தப் படித்த கல்லூரி பேராசிரியர் இணையர்கள் பக்தியின் பேரால் ஏற்பட்ட மூட நம்பிக்கையால் தமது இருபது, இருபத்தைந்து வயது மகள்களை அடித்துக் கொன்றதும், கொன்றுவிட்டு அவர்கள் இரண்டு நாட்களுக்குப் பின்னர் உயிர்த்தெழுவார்கள் என்ற மூடநம்பிக்கையில் இருந்தது பற்றியும் எடுத்துக் கூறினார். தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட செய்தியை எல்லாம் எடுத்துச் சொன்னார்.
அது போலவே புதுக்கோட்டையில் மாந் திரீகம் என்ற பெயரில் தனது பேரப்பிள்ளை களை கொன்று விட்ட அவல நிலையையும் எடுத்துச் சொன்னார்.
உலகப் போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட - மத நம்பிக்கையின் பேரால் இறந்தவர்கள் அதிகம் என்பதையும் பதிவு செய்தார்
அய்தராபாத் கலவரம் பற்றிக் குறிப்பிடுகை யில் அந்த கலவரத்தில் 3 வயது குழந்தை கொல்லப்பட்டது பற்றி உருக்கமாக கூறி அந்த குழந்தை என்ன செய்தது என்கின்ற வினா வோடு விளக்கினார்.
இந்த மாதிரியான 3 வயது குழந்தையை கொல்லுகிற அளவுக்கு சென்ற மனநிலை சாதாரண நிலையில் வருமா? என்ற கேள் வியை எழுப்பியவர்,
சாதாரணமாக இருக்கும்போது இந்த நிலை வராது. பக்தி வந்தால் தான் இந்த நிலை தீவிரமடைகிறது. அதன் பின்னால் மூடநம்பிக் கையால் எவ்வளவு கொடுமையான செயல் களை படிக்காதவர்கள் மட்டுமல்ல, படித்தவர் களும் செய்கின்ற நிலை வருகிறது என்பதை விளக்கினார்.
கடவுள் மறுப்பு வாசகங்கள்
அய்யா அவர்கள் கடவுள் மறுப்பு வாசகங் களை கல்வெட்டுகளிலும், துண்டுப் பிரசுரங் களிலும், சுவர்களிலும் எழுதுங்கள் எனச் சொல்லி கடவுள் மறுப்பு பிரச்சார வாசகங்களை சொன்னபோது,
ஒரு முஸ்லீம், ஒரு இந்து, ஒரு கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த மத குருமார்கள் திருச்சியில் அய்யாவை சந்திக்கிறார்கள். வழக்கம் போல அய்யா அவர்களும் மரியாதையோடு அவர் களை வரவேற்று அமர வைத்து,அவர்களிடம் வந்த விஷயத்தைப் பற்றிக் கேட்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள் ‘ அய்யா நீங்கள் எவ்வளவோ நல்ல காரியம் செய்கிறீர்கள். எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் நீங்கள் கடவுள் மறுப்பு வாசகங்களை உங்களுடைய தோழர்களை கல்வெட்டுகளிலும் சுவர்களிலும் எழுதவும், அச்சடித்து விநியோகம் செய்யவும் சொல்கிறீர்களே. அது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது ‘ என்று சொன்னபோது,
யாரை நம்புகிறீர்கள்
அய்யா அவர்களிடம் கேட்டார். கிறிஸ்தவ மதக் காரரைப்பார்த்து அய்யா நீங்கள் யாரை நம்புகிறீர்கள். இவர்கள் சொல்கின்ற கடவுளை நம்புகிறீர்களா? என்று கேட்டபோது, இல்லை நான் கிறிஸ்துவை மட்டுமே நம்புவதாகவும், மற்ற மதக் கடவுள்களை தான் ஏற்றுக் கொள்வ தில்லை என்றும் கூறினார்.
முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவரை கேட்கும் போது உருவ வழிபாட்டை இவர்கள் ஏற்கிறார் கள். நாங்கள் உருவ வழிபாட்டை ஏற்பதில்லை..அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூறினார். மற்றவர்களை ஏற்பது இல்லை என்றார்.
அடுத்து இந்து மதத்தைச் சேர்ந்தவரிடம் கேட்கும்போது அவர் மற்ற இரு மதக்கடவு ளையும் தாங்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை என்பதை கூறினார்.
இப்போது அய்யா சொல்கிறார் ‘ இதைத் தான் நானும் சொல்கிறேன்’. நீங்கள் இவர்கள் இருவர் கடவுள்களையும் ஏற்றுக்கொள்வ தில்லை. மற்றவர் மற்ற இருவர் கடவுளை ஏற்றுக் கொள்வதில்லை.
நான் உங்கள் மூவர் கடவுளையும் ஏற்றுக் கொள்ளவில்லை.அதுதானே விஷயம் என எளிமையாக புரிய வைத்து அனுப்புகிறார்.இதை மிகுந்த சுவையோடு நேரு அவர்கள் விளக்கினார்கள்.
சமூக மரியாதை கிடைக்கிறது
பக்தி அறியாமையில் இருந்து வருவது மட்டுமல்ல, ஆசையில் இருந்தும் வருகிறது. சமூக மரியாதை கிடைக்கிறது என்பதால் வருகிறது என்பதை விளக்கினார்.
பக்தி கூட நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஒரு நாட்டில் சனிக்கிழமை ஓய்வெடுங்கள் என்கிறது ஒரு மதம். ஞாயிற்றுக்கிழமையை ஓய்வெடுங்கள் என்கிறது இன்னொரு மதம். வெள்ளிக்கிழமை ஓய்வெடுங்கள் என்கிறது மற்றொன்று.
பக்திக்கு எதிரான புத்தகங்களை வரிசை யாக கூறினார். மதுரையில் கிறிஸ்தவ பேராசிரி யர் எப்படி மதத்தை விட்டு விலகினார். மதத்தில் இருந்து வெளியேறினார் என்பது பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்
மெக்சிகோ,பெரு போன்ற நாடுகளில் உள்ள பழங்குடி செவ்விந்தியர்கள் குழந்தை பிறந்தவுடன் ஞானஸ்நானம் பண்ணி அந்த குழந்தை தலையில் அடித்துக் கொன்று இந்த குழந்தை நேரே சொர்க்கம் சென்று விடும் என்று பெற்றோர்களிடம் சொல்லுகின்ற நிலை யும், அதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்கின்ற நிலையையும், அந்த அளவுக்கு மூட நம் பிக்கை இருக்கிறது என்பதையும் பற்றியும் விளக்கினார். சொர்க்கம் - நரகம் பற்றிய நம்பிக்கையை அவர்களைக் கொண்டே சொல்ல செய்தார்கள் என்று சொல்லி,
நான் ஏன் கிறிஸ்துவனல்ல
நான் ஏன் கிறிஸ்துவனல்ல என்ற பெட் ரண்ட் ரஸ்ஸல், ஆந்திராவைச் சேர்ந்த காஞ்சா அய்லயா போன்ற அறிஞர்கள், அய்தராபாத் பேராசிரியர் ஆகியோருடைய கூற்றுக்களை எல்லாம் எடுத்துரைத்தார்.
மக்களைப் பற்றி யோசிப்பவர்கள் எல்லாம் பக்தி, மதம் மக்களுக்கு எதிரானது என் கிறார்கள்.
மதம் படிக்காதே என்கிறது...
எல்லோரும் படிக்க வேண்டும் என்கிறது திராவிட இயக்கம்.
பக்தி வேண்டாம் என்றால் ஒழுக்கமே வேண்டாம் என்கிறீர்களா? என்ற ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள் பக்தியைப் பரப்புபவர்கள்.
அதற்கு அய்யா அவர்கள் ‘பக்தி என்பது தனிச்சொத்து. ஒருவனுக்கு பக்தி தனிப்பட்ட விஷயம்.ஆனால் ஒழுக்கம் என்பது பொதுவானது ‘என்கிறார்.
பக்தி இல்லாவிட்டால் ஒன்றும் நட்டம் இல்லை. ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் சமுதாயத்திற்கு கேடு என்பதை தெளிவாக விளக்கினார்.
ஒழுக்கம் பொதுவானது...
அடுத்து ஒழுக்கம் என்பதற்கு அய்யா அவர்கள் ஒரு தெளிவான விளக்கத்தை அளித்தது பற்றியும் கூறினார்.
‘ஒழுக்கம் என்பது உன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக் கிறாயோ அப்படியே நீ அவர்களிடம் நடப் பதே ஒழுக்கமாகும்’ என்பதை வலியுறுத்து கிறார்.
அடுத்து பிரார்த்தனை மோசடி பற்றிய 1985இல் ஆசிரியர் பேசிய பேச்சை பேரா. நன் னன் அவர்கள் புத்தகத்தில் வெளியிட்டிருப் பது பற்றியும், அந்த புத்தகத்தில் உள்ளதை தெளி வாக படித்தும் காட்டினார்.
1930 இல் பெரியார் பேசி குடிஅரசில் வெளிவந்த கட்டுரையை குறிப்பிட்டார். பிரார்த்தனைக்கு அடிப்படை மூடநம்பிக்கை. மூட நம்பிக்கையில் துளிர்ப்பது பிரார்த்தனை. என்பதை விளக்கினார்.
கார்ப்பரேட் சாமியார்களின் தந்திரங்கள்
நரேந்திர தபோல்கர் பற்றிய செய்திகளை எல்லாம் எடுத்துரைத்தார். கார்ப்பரேட் சாமி யார்கள் செய்யும் தந்திரங் கள் பற்றியும் பிரார்த்தனைகள், மோசடிகள் பற்றியும் தெளி வாக விளக்கினார்
முன்பு நோய் வந்தால் கோயிலுக்கு மட்டுமே சென்றவர்கள், இப்போது அறிவு வளர, வளர மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலையில் உள்ளதையும், இன்னும் சிலர் மருத் துவ மனைகளுக்கும் கோயிலுக்கும் செல்லும் நிலையிலும் இருக் கிறார்கள், இன்னும் மூடநம்பிக்கையில் உள்ள அறிவியல் படித்த மருத்துவர்கள் கூட நோயாளிக்கு கடைசி நிலை வந்தவுடன் எங்களால் முடிந்ததை பார்த்து விட்டோம் நீங்கள் கடவுளிடம் வேண் டிக் கொள்ளுங்கள் என்று சொல்லுகின்ற நிலையிலேயே பக்தி, பிரார்த்தனை அந்தள வுக்கு மூட நம்பிக்கையை ஏற்படுத்தியிருக் கிறது.
இந்த மூடநம்பிக்கையை எப்படி பரப்பு கிறார்கள் என்றால் ஒருவர் துயரத்தில், கஷ்டத் தில் இருக்கும்போது பேசுவாங்க.பிரார்த்தனை யால் எதுவும் நடக்கும் என்று சொல்கிறவர் களால்,
முடவர்கள் நடக்கிறார்கள்,
குருடர்கள் பார்க்கிறார்கள்
என்று சொல்கிறவர்களால்,
ஒரு இட்லியைக் கூட வேக வைக்க முடியாது
என்பதை தெளிவாக விளக்கினார்.
பாவமன்னிப்பு கொடுப்பது...
பாவமன்னிப்பு கொடுப்பது என்பது தவறு செய்வதை தூண்டுவதே ஆகும்.ஒரு வாரம் தவறு செய்துவிட்டு பாவ மன்னிப்பு வேண்டி முடித்துவிட்டு வந்து,அவர்கள் கூற்றுப் படியே மறுவாரம் தவறு செய்யலாம் என்கின்ற ஒரு மோச மான மூடநம்பிக்கையை தெளிவாக விளக்கினார்.
பாவ மன்னிப்பு என்பது அயோக்கியத் தனமானது என்பதையும் விளக்கினார்.
பிரார்த்தனை என்பது சமுதாயத்தை அடிப்படையிலேயே கெடுப்பது என்பதை விளக்கிக் கூறினார். லஞ்சம் என்பது கூட பிரார்த்தனையில் தான் தொடங்குகிறது. இதைச் செய் நான் பரிகாரம் செய்கிறேன் என்கின்ற நிலை உள்ளது. இதை எனக்கு செய்து கொடு. நான் உனக்கு அந்த பரிகாரம் செய்கிறேன் என்று லஞ்சத்திற்கு ஆரம்பமே பிரார்த்தனை தான்.
கடவுள் கற்பனையை விட பிரார்த்தனைக் கற்பனை மோசமானது என்கிறார் பெரியார்.
கடவுளை உண்டாக்கியது பிரார்த்தனை யால் வரும் வருமானத்திற்கு தான் என்பதை தெளிவாக விளக்கினார்.
அர்த்த சாஸ்திரத்தில்
சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில், அர சாங்கத்திற்கு எப்போதெல்லாம் பணம் தேவைப் படுகிறதோ அப்போதெல்லாம் கோயிலை உண்டாக்கு என்ற சாணக்கியரின் கூற்றை தெளிவாக விளக்கினார்.
பார்ப்பனர்கள் எப்படி பிரார்த்தனையை பயன்படுத் தினார்கள் என்பதை, உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள்கள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவை. மந்திரம் பார்ப் பனர்களுக்கு கட்டுப்பட்டது. எனவே இந்த உலகம் எங்க ளுக்கு கட்டுப்பட்டது என்று கூறி பிரார்த்தனை மோசடியில் அவர் கள் வருமானம் பார்க்க ஆரம்பித்தார்கள்.
அடுத்து சிங்கப்பூரில் உள்ள மூடநம்பிக்கை பற்றியும். பேய், பூதம், பிசாசு அல்லது ஆவிகள் பற்றி இங்கர்சால் கூறியது பற்றியும் எடுத்து ரைத்தார்.
ஸ்டீவ் ஹாக்கின்ஸ் பற்றி, அவருடைய கூற்றுகள் பற்றி கூறினார்.
இன்றைக்கு அறிவியல் வளர்ந்து இருக் கிறது. அறிவு வளர்ந்து இருக்கிறது. பல இடங் களில் தேவாலயங்கள் மூடப்படுகின்றன என் கிற விவரத்தை எல்லாம் எடுத்துரைத்தார்.
அடுத்து கேள்வி நேரத்தில்,
பயிற்சியாளர் புஷ்பலதா என்பவர் கேட்ட கேள்விக்கு ராமனும் வேண்டாம்.கிருஷ்ண னும் வேண்டாம் என்பதை எடுத்துச் சொன் னார்.
பயிற்சியாளர் தேவி என்பவர் கேட்ட, பெண்கள் பொட்டு வைப்பது பற்றிய கேள்வி களுக்கும் தக்க விளக்கம் அளித்தார்.
பயிற்சியாளர் சுசித்ரா என்பவர் கேட்ட அம்மா, அப்பா பற்றிய கேள்விக்கு பயம் தேவையில்லை. நாத்திகர்கள் பயப்படுவ தில்லை. நிறைய படியுங்கள். அறிவியல் கட்டுரைகள், அய்யாவின் நூல்கள், ஆசிரியர் நூல்கள், ‘விடுதலை', 'உண்மை','The Modern Rationalist, ‘பெரியார் பிஞ்சு' படியுங்கள் ஒப்பிட்டுப் பாருங்கள். உண்மையை உண ருங்கள் என எடுத்துரைத்தார்.
சிறுதெய்வ வழிபாடு
பயிற்சியாளர் பழனிச்சாமி என்பவர் சிறுதெய்வ வழிபாடு பற்றி கேட்டதற்கு சிறு தெய்வ வழிபாடும் நமக்கு உடன் பாடானது இல்லை என்பதைத் தெளிவாக விளக்கினார்.
ஓசூர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஓம் சக்தி மாலை போடுகிறார்கள் சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை. இதை எப்படி புரிய வைப்பது? என்பதற்கு நிதானமாக அவர்க ளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைக்க வேண்டும். நிறைய படிக்கச் சொல்ல வேண்டும் என்பது பற்றி விளக்கினார்.
பயிற்சியாளர் காவிரி என்பவர், பக்தியை எதிர்த்து பிரச்சாரம் செய்வது பற்றி கேட்டார். பெண்கள் பக்தியில் இருந்து வெளிவருவது மிகுந்த சிரமமாக இருக்கிறது என்பது பற்றிய கேள்விக்கு,தெளிவாகவும் நிதானமாகவும் நம்முடைய அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விளக்கினார்.
ராக்கெட்டு அனுப்ப நல்ல நேரம்
பயிற்சியாளர் வேண்மாள் அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்திலும் ராக்கெட்டு அனுப்ப நல்ல நேரம், எலுமிச்சைப் பழம் வைப்பது பற்றி கேள்வி எழுப்பினார்.
அறிவியல் அறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அறிவியல் மனப் பான்மை இருப்பதில்லை. எவ்வளவு படித்தா லும் அவர்கள் இன்னும் மூடநம்பிக்கையோடு தான் இருக்கிறார்கள் என்பதையும், அவர்க ளுக்கு அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும் என்பதையும் விளக்கினார்.
பயிற்சியாளர் கார்த்திக் சண்முகம், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அதிசயம் நடந்து உள்ளது என்று சமரசம் செய்து கொள் கிறார்களே இதை எப்படிப் பார்ப்பது? என்பது கேட்டார்.
அதற்கு தெளிவாக ஒரு விபத்தை சுட்டிக் காட்டி அந்த விபத்தில் இருவர் இறக்கிறார்கள். இருவர் பிழைக்கிறார்கள் என்பதை பற்றி யெல்லாம் கூறி சிந்தியுங்கள், ஆராயுங்கள், தெளிவு பெறுங்கள் என்றார்.
தொடர்ந்து பொதுச்செயலாளர் வி.மோகன் அடுத்த நாள் நிறைவு பயிற்சியை ‘ஆத்மா’ என்னும் பொருளில் திராவிடர் கழக பொருளா ளர் வீ.குமரேசன் நடத்துவார் என்றும் அந்த நிகழ்வை மாநில துணைத்தலைவர் அ.தா.சண் முகசுந்தரம் ஒருங்கிணைப்பார் என்றும் கூறினார்.
இறுதியில் தரும.வீரமணி நன்றி கூறி, நிகழ்வை நிறைவு செய்தார்.
இந்த வகுப்பில் 97 பேர் பயிற்சி பெற்றனர்.
No comments:
Post a Comment