சென்னை,ஜன.2 சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வலு தூக்குவதிலும் வீரராவார். சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மாநில அளவி லான 'பெஞ்ச் பிரஸ்' வலுதூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து, தேசிய அளவி லான போட்டிக்கு தகுதிபெற்றார். பின்னர், கோவா வில் நடைபெற்ற தேசிய அளவி லான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார். இதன்மூலம் துருக்கியில் நடை பெற்ற ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வா னார்.
துருக்கியில் 29.12.2021 அன்று நடைபெற்ற வலுதூக்கும் போட்டி யில் 140 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், ஆசிய அளவில் வலு தூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்று, சாதனை படைத் துள்ளார்.
மாநிலங்களவை தி.மு.க. உறுப்பி னரும், தி.மு.க. அமைப்புச் செயலாளருமான வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி சுட்டுரையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் இச் சாதனையை படத்துடன் வெளி யிட்டு பாராட்டியுள்ளார். மேலும், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த் துள்ள தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டு குவிகிறது.
No comments:
Post a Comment