தந்தை பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாகக் கொண்டாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

தந்தை பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாகக் கொண்டாட்டம்

 சென்னை, ஜன.8 தி.மு.. தேர்தல் வாக் குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்அவர் பேசியதாவது:

நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் கரோனா தடுப்பு நடவடிக் கைகளைப் பற்றி இங்கு பேசினார். கரோனாவைத் தடுக்கின்ற அரண் என்பது தடுப்பூசிதான். நாங்கள் ஆட் சிக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டிலே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய வர்கள் 8.09 சதவீதம் மட்டும்தான். 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திய வர்கள் 2.84 சதவீதம் மட்டும்தான். அதாவது முதல் 4 மாதங்களில் செலுத் தப்பட்ட தடுப்பூசியின் அளவு இவ் வளவுதான். ஆனால், அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்த ஏழே மாதங்களில், மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்திக் கொள் வதை மக்கள் இயக்கமாக ஆக்கினோம்.

தற்போது தமிழ்நாட்டு மக்களிலே 87.27 சதவீதம் மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். 61.25 சதவீதம் மக்கள் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். இதுவரை மொத்தம் 8.76 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. 15 முதல் 18 வயதுவரை உள்ள குழந்தை களுக்கு ஜனவரி 3ஆம்தேதி தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைத்தேன்.

உயிர் காக்கும் அரசு

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 60 வயதுக்கும் மேற்பட்ட எளிதில் பாதிக் கப்படக் கூடியவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் கூடுதல் தவ ணையில் தடுப்பூசி செலுத்த நடவ டிக்கை எடுக்கப்படுகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், அதனால் பெரும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தடுப்பூசியைப் பெரும் பாலானவர்களுக்கு செலுத்தியதுதான் காரணம்.

கரோனா வார்டுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தேன். சாலையில் இறங்கி முககவசம் அணியாதவர்களுக்கு முககவசம் அணிவித்தேன். ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் என்ற உன்ன தமான எண்ணம்தான் இதற்குக் கார ணம். உங்களின் அரசாக மட் டுமல்ல; உயிர் காக்கும் அரசாக இந்த அரசு இயங்கி வருகிறது என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போது மானது.

அறிவிப்புகளை ஆணைகளாக வெளியிடும் அரசு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் மட்டுமல்ல; அனைத்துத் துறைகளும் இந்த அரசைப் பொறுத்தவரையில் மக்கள் நல்வாழ்வுத் துறைதான். அந்த எண்ணத்தோடுதான் அனைத்து வாக்குறுதிகளையும் நிறை வேற்றி வருகிறோம். கடந்த ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் 49 அறிவிப்பு களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு விட்டது என்பதை பெருமையோடு இந்த மாமன்றத்தில் பதிவு செய்கிறேன். மீதமுள்ள 17 அறிவிப்புகளில் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளவை 3. இன்னும் அரசாணை வெளியிட வேண் டிய அறிவிப்புகள் 14 என்ற நிலையில் உள்ளது. இவை ஏதோ அறிவிப்புகளாக மட்டுமல்ல; வெளியிட்ட அறிவிப்பு களில் 6 மாதத்தில் 75 சதவீதம் அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப் பட்டுவிட்டது. ஆகவே, இந்த அரசு அறிவிப்போடு நிற்பது இல்லை. எல்லா அறிவிப்புகளையும் ஆணைகளாக வெளியிடுகிற அரசு என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

மகளிருக்கு இலவச பேருந்து வசதி

சொற்கள் தனி மனிதனுடைய வெறும் சொற்களாக இல்லாமல், அரசாங்கத்தினுடைய ஆணைகளாக அதை மாற்றி வருகிறோம். இந்த ஆணைகள் அனைத்திற்கும் செயல் வடிவம் கொடுத்து வருகிறோம். அந்த அரசாணைகளில் மிக முக்கியமானவை களை மட்டும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மகளிருக்கு கட்டண மில்லா பேருந்து வசதி, கரோனா கால நிவாரணமாக ரூ.4 ஆயிரம்; ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு; பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு;

சமூகநீதிப் போராளிகளுக்கு

இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.317 கோடியிலான பல்வேறு திட்டங்கள்; பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாகக் கொண்டாட்டம்; மீனவர் களுக்கு வழங்கக்கூடிய சிறப்பு உதவித் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்வு; விழுப்புரத்தில் சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண் டபம்; நெசவாளர் கோரிக்கையை ஏற்று பஞ்சுக்கு ஒரு சதவீதம் வரி ரத்து; அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப் படி உயர்வு; தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கம்; கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன் களும், தமிழ்நாட்டு வரலாற்றில் முதன் முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் முழுமையாக ரத்து - இப்படி எண்ணற்ற சாதனைகளைச் செய்திருக்கிற அரசுதான் இந்த அரசு, உங்கள் அரசு.

பெரும்பாலான வாக்குறுதிகள்

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், தி.மு.. சார்பில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி னோம். குறுகிய காலத்தில் அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகளுக்கு ஆணைகள் வெளியிடப்பட்டு அவை படிப்படியாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் அறிக் கையில் சொல்லியிருக்கின்ற வாக்குறுதி களை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் என்பது 5 ஆண்டுகள். அந்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவோம் என்பதுதான் தேர்தல் அறிக்கையின் சாராம்சம்.

தேர்தல் வாக்குறுதி

ஆனால் பெரும்பாலான வாக்குறு திகளை 5 மாத காலத்திலே நிறை வேற்றியுள்ள ஆட்சிதான் தி.மு.. ஆட்சி. தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றுவது பற்றியும், அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது விளக்கம் தந்திருக்கிறார். நீங்கள் இந்தத் தேர்தல் வாக்குறுதிகளை என்ன செய்யப் போகி றீர்கள் என்று கேட்கிறார்கள். கேட்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை.

ஆனால் கேட்பதற்கு முழு உரிமை பெற்றவர்கள் எங்களுக்கு வாக்களித் தவர்கள். ஏனென்றால் நம்பி எங்களுக்கு வாக்களித்தார்கள். அவர்கள் கேட்க வேண்டும். ஆனால் நீங்கள் கேட்கி றீர்கள். பரவாயில்லை. ஏன் பராவாயில்லை என்று சொல்கிறேன் என்றால், வாக்காளர்களுக்கு அந்த அவநம்பிக்கை ஏற்படவில்லை. ஆகையால் அவர்கள் எங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள் என்ன ஆயிற்று என்று?.

கல்விப் புரட்சியை உருவாக்கும்

நான் முன்பே சொல்லியிருக் கின்றபடி படிப்படியாக முறையாக உரிய காலத்தில் உரிய அளவிற்கு நிச்சயமாக அது நிறைவேற்றப்படும். அண்ணாவின் விளக்கத்தை அனை வரும் ஆய்ந்து சிந்தித்துப் பார்த்து ஏற்க வேண்டும் என்று நான் மிகுந்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆளுநர் உரையில், மிக மிக முக்கியத் திட்டமாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் என்கிற திட்டம் - அதாவது திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்குகின்ற திட்டம் வெளியிடப்பட்டிருக்கின்றது. தமிழ் நாட்டிலுள்ள 24 ஆயிரத்து 345 தொடக்கப் பள்ளிகளிலும் திறன்மிகு வகுப்பறைகள் தொடங்கப்படும். அரசுப்  பள்ளிகள், அந்தப் பள்ளிகளின் வரலாற்றில் - இது ஒரு மாபெரும் கல்விப் புரட்சியை உருவாக்கும் என் பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் - இந்தியாவிற்கே முன்னோடி யாக செயல்படுகின்ற பெயரை எட்டிட இந்த அரசு தனது அனைத்து சக்தி யையும் பயன்படுத்தும் என்பதை நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு  முதலமைச்சர் பேசினார்.

No comments:

Post a Comment