உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பார்ப்பனர் ஒருவர் - பெண் களை ஆபாசமாகப் படம் பிடித்து பிறகு அவர்களை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுவது அவரது அன்றாடப் பணி! அவர் மீது எழுந்த புகாரை அடுத்து அவரைக் கைது செய்யச் சென்ற காவல்துறையினரிடம் "நான் பிராமணன், என்னைக் கைதுசெய்தால் உங்களுக்கு ஜென்மபாவம் பிடிக்கும்" என்று கூறி மிரட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தராகண்ட் மாநில எல்லை மாவட்டமான சைலோனில் பள்ளி மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகள் தங்கள் படம் இணையதளத்தில் ஆபாசமாக வருவதாகவும், ஒருவர் கைப் பேசி மூலம் "இன்னும் அதிக படம் உள்ளது, அவற்றையும் வெளியிடுவேன்" என்று மிரட்டுவதாகவும் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் சில அழகு நிலையங்களில் ரகசிய காமிராக்கள் வைத்திருப்பதை அங்குப் பணிபுரியும் பெண்கள் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்தனர். உத்தரப் பிரதேசம் பரேலியைச் சேர்ந்த விபின் குமார் என்ற பார்ப்பனர் கடை மற்றும் தொழில் நிறுவனங்களில் தினசரி ‘சாமி' படங்களுக்குப் பூமாலை அணிவித்து அதற்கான பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது, அவன் அதிகாலையில் பெண்கள் மட்டுமே வரும் அழகுநிலையங்களில் உள்ள ‘சாமி' படங்களுக்கு மாலை போடுவான். அவன் அங்கே ரகசிய காமிராவை வைத்துள்ளதும் தெரியவந்தது.
இதை அவன் தனது அலைபேசியுடன் இணைத்து அழகு நிலையங்களில் உள்ள பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்துள்ளான். அதனை அவர்களுக்கு அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது, இந்த நிலையில் தனது நடவடிக்கை குறித்து காவல்துறை விசாரித்து வருவதை அறிந்து தனது சொந்த ஊரான பரேலிக்கு ஓடி விட்டான்.
இந்த நிலையில் மேலும் சில பெண்கள் தங்களின் ஆபாசப் படங்களைக் காட்டி பாலியல் சீண்டலில் விபின்குமார் ஈடுபட்ட தாக புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து உத்தராகண்ட் மாநில காவல்துறை விபினின் முகவரியை அறிந்து அங்கு சென்றனர். தன்னைத் தேடி காவல்துறை வீட்டிற்கே வந்ததை அறிந்து அவனும், அவனது வீட்டாரும் "நாங்கள் பிராம ணர்கள்; எங்கள் வீட்டிற்குள் காவல்துறை வந்து விசாரணை செய்யக்கூடாது" என்று மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் விபினை கைதுசெய்ய முயன்ற போது சொம்பில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, "நான் பிராமணன், என்னைக் கைதுசெய்தால் உங்கள் மீது சாபம் விட்டுவிடுவேன்" என்று கூறி கைது செய்யச்சென்ற காவல்துறையினர் மீது தண்ணீரைத் தெளித்துள்ளான். மேலும், "என்னைத் துன்புறுத்தினால் உங்களுக்கு ஜென்ம பாவம் பிடிக்கும்" என்று மிரட்டியுள்ளான். ஆனால் காவல்துறையினர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவனைக் கைதுசெய்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில் ,அவன் உத்தராகண்ட் சைலோன் மாவட்டத்தில் யோகா பயிற்சி என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தியதாகவும், அவனிடம் ஒன்றிய அரசின் யோகா பயிற்றுநர் சான்றிதழ் இருந்ததால் பலர் அவனிடம் யோகா கற்க வந்துள்ளனர். தன்னிடம் யோகா கற்கவந்தவர் களில் இளம்பெண்களைப் படம் எடுத்து மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான்.
இது தொடர்பாக புகார் அளித்தால் தான் சாபம் விட்டுவிடுவேன் என்றும், அதனால் பிள்ளை பிறக்காது, குடும்பத்தில் பெருங்கஷ்டம் வரும், கணவன் இறந்துவிடுவான் என்றெல்லாம் மிரட்டியது தெரியவந்துள்ளது.
மேலும் எந்த ஓர் உடற்குறைபாடும் இல்லாத அவன் ஊனமுற்றோருக்கான உதவித்தொகை பெற்றுவருவதும் தெரியவந்தது, அவனது அலைபேசியில் இருந்து ஆயிரக் கணக்கான பெண்களின் ஆபாச நிலையில் உள்ள படங்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அவனை உத்தராகண்ட் அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
2018 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்து அமைப்பினரால் ஆசிபா என்ற 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருமே பார்ப்பனர்கள். இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரி ஸ்வேதா சிங் தலைமையில் குற்ற வாளிகளை விசாரணை செய்த போது "நாங்கள் அனைவரும் பார்ப்பனர்கள், இந்திய குற்றவியல் சட்டங்கள் எங்களை ஒன்றும் செய்யாது. நீயும் பார்ப்பனப் பெண், எங்களைக் கைது செய்து விசாரித்தால் நமது பார்ப்பன குலத்திற்கு கேடுவரும் என்று தெரியாதா?" என மிரட்டினர். இப்போது பாலியல் குற்றவாளியும், அதே போன்று மிரட்டியுள்ளான்.
உத்தரப்பிரதேசத்தில் 12 விழுக்காடு அளவுக்குப் பார்ப்பனர் களின் மக்கள் தொகை உள்ளது. விரைவில் தேர்தல் வரும் நிலையில் அங்குள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் இந்த 12 விழுக்காடு பார்ப்பனர்களின் வாக்குகளுக்காக தவம் இருக் கிறார்கள். சாமியார் ஆதித்ய நாத் முதல் அமைச்சரான நிலையில், பார்ப்பனர்கள் கொட்டம் அங்கு தலை கொழுத்து நிற்கிறது. மிரட்டுவது, காவல் துறையினரை ஜாதி அடையாளம் காட்டுவது என்பது எல்லாம் எத்தகைய திமிர்வாதம்!
இந்த 2022ஆம் ஆண்டிலும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைத் தால் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதற்கு உ.பி.யில் நடக்கும் இத்தகு நிகழ்வுகளே போதுமானவை. இந்து ராஜ்ஜியத்தின் சோதனைக் களமாக உ.பி.யைப் பயன்படுத்தி வருகிறார்கள். 88 விழுக்காடு உள்ள பார்ப்பனர் அல்லாத உ.பி. வாக்காளர்கள் வரும் தேர்தலில் ஒன்றிணைந்து இதற்கொரு பாடத்தைக் கற்பித்தால், அது இந்தியத் துணைக் கண்டம் அளவிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமே!
No comments:
Post a Comment