ஈரோடு, ஜன.19- ஈரோடு நகரில் உடல் நிலை பாதிக்கப்பட்டவருக்கு ‘பரிகாரம்’ எனும் மூடத்தனத்தால் பெண் உயிரிழந் துள்ளார்.
ஈரோடு மரப்பாலம் கோப்பெருந் தேவி வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 72). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவருடைய மகள் பிரதீபா (வயது 39). இவர் கடந்த 20 ஆண்டு களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந் தார். இதற்காக அவர் தினமும் 15 மாத் திரைகள் சாப்பிட்டு வந்தார். இரவில் மாத்திரை சாப்பிட்டு தூங்கும் பிரதீபா தினமும் காலை 11 மணிக்குத் தான் எழுந்திருப்பார்.
இந்நிலையில் பிரதீபா விரைவில் குணமடைய வேண்டி அவர் குடும்பத் தினர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு கூறிய பரிகாரத்தின்படி கடந்த சில நாட்களாக பிரதீபா காலையில் எழுந்து தலைக்கு எலுமிச்சம்பழம் தேய்த்து குளித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு நெஞ்சு சளி அதிகமாகி அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு பிரதீபா எப்போதும் தான் சாப்பிடும் 15 மாத்திரைகளுடன் சளிக்கு 2 மாத்திரைகளை சேர்த்து சாப்பிட் டுள்ளார். மறுநாள் காலை 11 மணி ஆகியும் பிரதீபா எழுந்திருக்கவில்லை. அவரது தந்தை மகள் நன்றாக தூங் குகிறாள் என்று நினைத்து உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு மாலை திரும்பி வந்துள்ளார்.
அப்போது பிரதீபா மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரதீபாவை சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 15ஆம் தேதி அவரை ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த பிரதீபா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment